மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கணனி கற்கை நெறியினை ப+ர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்குகின்ற நிகழ்வும், இன்று திங்கட் கிழமை (17) நடைபெற்றது.
6 மாதங்கள் கொண்ட கணனி கற்கை நெறியினை ப+ர்த்தி செய்த 30 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
இக்கணினி கற்கை நெறியை தொடர்ந்தும் சிறப்பாக நடைமுறைப் படுத்துவதற்காக பிரதேச சபைக்கு வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்டத்தினால் 05 கணினிகள் வழங்கி வைக்கப் பட்டன.
இந்நிகழ்வில் வேள்ட்விஸன் நிறுவன கள நடவடிக்கைக்கான வலய முகாமையாளர் எ.அலெக்ஸ் பென்சமின், மண்முனை தென்மேற்கு ( கொக்கட்டிச்சோலை) பிரதேச சபை செயலாளர் எஸ்.கிருஸ்ணபிள்ளை, மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச சபை செயலாளர் திருமதி. அருள்பிரகாசகம், வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளைப் பிராந்திய அபிவிருத்தி திட்ட முகாமையாளர் ஜி.ஜே.அனுராஜ், நாவிதன்வெளி முகாமையாளர் பிரமசந்திரன், ஏறாவ+ர் முகாமையாளர் சுரேஸ் ஞானப்பிரகாசகம் மற்றும் திட்ட இணைப்பாளர்கள், மாணவர்கள் உத்தியோகத்தர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment