17 Nov 2014

இலத்திரனியல் கதைகூறல் போட்டியில் தேசிய மட்டத்தில் கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவி சாதனை

SHARE
(தில்லை)
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியபாடசாலையானது தேசிய விஞ்ஞான மன்றத்தினரால் இலங்கையில் உள்ள மும்மொழிமூலமான பாடசாலை மாணவர்களிடையே உலக விஞ்ஞான
தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட இலத்திரனியல் கதைகூறல் போட்டியில் செல்வி காயந்தி.ரமேஷ் முதலாமிடத்தினை பெற்றுக்கொண்டதாக கல்லூரி முதல்வர் எம்.ஸ் ரீபன் மத்தியு தெரிவித்தார்.

வெற்றியீட்டிய மாணவியை பாராட்டி கொரவிக்கும் நிகழ்வு  கல்லூரி அரங்கில் நடைபெற்றபோதே இதனைத்தெரிவித்தார்.

அண்மையில் தேசிய விஞ்ஞான மன்றத்தினால் நடத்தப்பட்ட போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியபாடசலை மாணவி செல்வி காயந்தி.ரமேஷ் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்று கொண்டார்.

இவர் சென்றமுறையும் இதே விஞ்ஞான மன்றத்தினால் நடத்தப்பட்ட புனைகதைப்போட்டியிலும் தேசியமட்டத்தில் முதலாமிடத்தினை பெற்று இக்கல்லூரிக்கும், கல்முனை வலயத்திற்கும், எமது சமூகத்திற்கும்  பெருமைதேடித்தந்துள்ளார் எனவும் கூறினார்.









SHARE

Author: verified_user

0 Comments: