6 Nov 2014

ஊடகத்துறை புனிதமானது - பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெதினம்.

SHARE


ஊடகத்துறை புனிதமானது எனது தாயை நேசிப்பது போல் ஊடகத்துறையினை நேசிக்கின்றேன். காரணம் ஊடகவியலாளர்கள் பிரதேசங்களின் அபிவிருத்தி மக்களின் அபிலாசைகள். போன்ற பல விடையங்களை உண்மையாகவும் நேர்மைத் தன்மையுடனும் வெளியிட்டுக் கொண்டிருகின்றார்கள். இவை போன்று இன்னும் பல விடையங்களை ஊடகத்துறையின் வாயிலாக மக்களுக்கு ஊடகவியலாளர்கள் வெளிக்கொணர வேண்டும். ஊடக்துறை மென்மேலும் வளரவேண்டும் ஊடகவியலாளர்கள் பாராட்டப்பட வேண்டும் இவைகள் அனைத்துற்கும் பிரதேச செயலாளர் என்ற வகையில் எனது சகல ஒத்துளைப்புக்களையும் என்னால் வழங்க முடியும்.

என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெதினம் தெரிவிதுள்ளார்.

கிழக்கிலங்கை இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக் கிழமை (02) களுவாஞ்சிகுடி சைவ மகா சபை கட்டிடத்தில் அதன் தலைவர் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவரஜாவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதயாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்குகைகயில்…

ஊடகவியலானர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் அணுகி செய்திகளைப் பெறுகின்றபோது மக்களின் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.
களுவாஞ்சிகுடிப் பிரதேசம் நூறு வீதம் தமிழ் மக்கள் வாழுகின்ற பரதேசதம் இந்தப் பிரதேசத்தில் மறைமுகமான நோய் ஒன்று தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அவை என்னவெனில் இளவயது திருமணம், சட்டவிரேத கருக்கலைப்பு, நஞ்சருந்துதல், தூக்கில் தொங்குவது, போன்ற குடும்பப் பாங்கான பிரச்சனைகள் இப்பிரதேசத்தல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.
தற்போதைய காலச் சூழ்நிலை மாறிக்கொண்டு வருகின்ற இந்நிலையில் மக்கள் ஏன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே மக்களுக்கு இவை சம்மந்தப்பட்ட விழிப்புணர்வுகள் தேவையாகவுள்ளது.  எனவே ஊடகவியலாளர்கள் இவை சம்மந்தப்பட்ட விடையங்களில், மிகவும் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு செய்திகளை வெளியிட வேண்டும். 


என்னைப் பொறுத்த வரையில் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பெறுப்புடன் கடமை பரிந்து வந்தேன். ஆனால் பல சவால்களையும் அங்கு எதிர் கொண்டு கடமை புந்து வந்தேன். தற்போது வரைக்கும் நான் அம்பாறை மாவட்டத்தில் கடமை செய்திருந்தேன் என்றால் எனது உயிருக்கும் ஆபத்து வந்திருக்கும். அதன் பின்னர்தான் நான் மட்டக்களப்புக்கு வந்து களுவாஞ்சிகுடி பிரதேச மக்களுக்காக சேவை செய்து வருகின்றேன்.  எனவே எனது ஒத்துழைப்புக்கள் என்றென்றும் ஊடகத்துறைக்கு இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: