தேசிய வாசிப்பு மாத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுதாவளை பொது நூலகத்தில் சனிக்கிழமை (01) பாடசாலை மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் போட்டிகள் களுதாவளை வாசகர் வட்டத் தலைவர் ஆர்.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கட்டுரை எழுதுதல், வாசிப்பு போன்ற போட்டிகள் இடம்பெற்றன.
6ஆம், 7ஆம், 8ஆம், ஆண்டு மாணவர்களுக்கு முதலாம் பிரிவாகவும், 9ஆம், 10ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டாம் பிரிவாகவும், 12ஆம்,13 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மூன்றாம் பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் களுதாவளை மகாவித்தியாலயம், மற்றும், களுதாவளை இராம கிருஷ்ண வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளையும் சேர்ந்த 40 மாணவர்கள் இதில் பங்கு பற்றினர்.
ஓவ்வொரு பரிவிலிருந்தும் தெரிவு செய்யப்படும், முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு பரசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக களுதாவளை பொது நூலகத்தின் நூலக உதவியாளர் எஸ்.சிறிதாரணி கூறினார்.
0 Comments:
Post a Comment