12 Nov 2014

விவசாகிகளின் ந ன்மை கருதி நீர்ப்பாசன வசதி – நவகிரிப் பிரிவு பொறியியலாளர் மயூரன்

SHARE
மட்டகளப்பு மாவட்டத்தின் படுவாக்கரைப் பிhந்தியத்தில் தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ள பெரும்போக வேளண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவிசாயிகளின் நன்மை கருதி நவகிரிக் குளத்திலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக நவகிரிப் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் எம்.மயூரன் கூறினார்.


பெரும்போக வேளாண்மைச் செய்கை மழை இன்மையினால் கருகி வருவதாக விவிசாகிகள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்விவசாயச் செய்கைக்கு தங்களது நீர்ப்பாசன உதவிகள் விவசாயிகளுக்கு எவ்வாறு அமைந்துள்ளன என்பது தொடர்பில் இன்று புதன் கிழமை மேற்படி பொறியியலாளரைத் தெடர்பு கொணடு கேட்போதே அவர் இவ்வாறு கூறினார்.


இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…..


படுவான்கரைப் பிராந்தியமான தும்பங்கேணி வயற் கண்டம், பாலையடிவட்டை வயற் கண்டம், மண்டூர் வயற் கண்டம் அடங்கலான இப்பகுதிகளில் தாழ் நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள  வேளாண்மைச் செய்கைக்கு எம்மால் குறிப்பிட்டளவு நீரை கடந்த 2 வாரங்களாக தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு இடையிடையே நீர் வழங்கி வருகின்றோம்.


இதனை விட உயரமான மேட்டு நிலத்தில் பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு எம்மால் நீர் வழங்க முடியாதுள்ளது. 


நவகிரிக் குளத்தில் தற்போது  2 அடி 3 அங்குலத்தில் 2 வான் கதவுகள் திறந்து விடப் பட்டுள்ளன. தற்போது இக்குளத்தில் 13 அடி 3 அங்குலத்தில் நீர் மட்டம் உள்ளது.


நவகிரிக் குளத்திலும் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து கொண்டு வருகின்றது இக்குளத்தில் 11 அடிக்கு நீர் மட்டம் கு
றையுமானால் தற்போது விவிசாயிகளுக்காக வழங்கப்பட்டு வரும் நீருத்தப் பட்டு விடும். எனவும் நவகிரிப் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் எம்.மயூரன் மேலும் கூறினார்.



SHARE

Author: verified_user

0 Comments: