30 Nov 2014

பிணை வழங்குவது' என்ற தொனிப்பொருளின் கீழ் கருத்தரங்கு

SHARE
மட்டக்களப்பு, பாசிக்குடா அமையா சுற்றுலா விடுதியில், 'பிணை வழங்குவது' என்ற தொனிப்பொருளின் கீழ் கருத்தரங்கொன்று சனிக்கிழமை (29) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (30) தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக நடைபெற்றது.

சனிக்கிழமையன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய நிகழ்வானது மாலை 3.30 மணிக்கு நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகிய நிகழ்வானது நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக, சட்ட உதவி ஆணையாளர் யு.ஆர்.டி.சில்வா தெரிவித்தார்.

சட்ட உதவி ஆணையாளர் யு.ஆர்.டி.சில்வா தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த பெரும்பாலான நீதிபதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதியரசர் கே.சிறிபவான் கலந்து கொண்டு பிணை தொடர்பான சட்டங்கள் பற்றி விளக்கமளித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் விஜித் மலகொடவும் ஓய்வு பெற்ற நீதியரசர் அப்துல் சலாம் ஆகியோர்களுடன் சட்ட மா அதிபர் திணைக்களத்திலிருந்து உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதனை சட்ட மா அதிபர் திணைக்களமும் நீதி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதற்கான நிதி அனுசரனையை யு.என்.டி.பி. நிறுவனம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: