
(தில்லை)
மனித மான்பிற்கு வித்திட்ட கிறீஸ்து என்ற தொனிப்பொருளில் கல்முனை கார்மேல்பற்றிமா கல்லூரியின் ஒளிவிழா நிகழ்வானது சனிக்கிழமை கல்லூரி முதல்வர் எம்.ஸ் ரீபன்மத்தியு தலமையில் சிசிலியா மேரி அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஆன்மீக இயக்குனரும் திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தையுமான அன்றனி லியோ, ஆன்மீக சொற்பொழிவாளரும் நாவற்குடா ஆலய பங்குத்தந்தையுமான எச்.ஐ.ரஜீவன் கல்லாறு மெதடிஸ்த்த ஆலய போதகர் தோமஸ் சசிகுமார், கல்முனை தமிழ்ப்பிரிவிற்கான கோட்டக்கல்வி அதிகாரி பி.ஜெகநாதன் மற்றும் கல்முனை வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பிப்பித்தனர்.
கல்லூரி முதல்வரின் சேவையினை பாராட்டி கௌரவித்து பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசும் வழங்கப்பட்டதுடன் இலங்கை மெதடிஸ்த்த திருச்சபையின் 17வது உபதலைவராக பதவியேற்றிருக்கும் உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் முதல்வர் வி.பிரபாகரன் அவர்களுக்கும், குருத்துவ வாழ்வில் 40வது ஆண்டினை நிறைவு செய்தவரும் ஆன்மீக இயக்குனருமான திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அன்றனி லியோ,அடிகளாருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment