26 Nov 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு வார காலமாக தொடர் மழை குளங்களின் நீர் மட்டமும் உயர்வு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு வார காலமாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்வில் சற்று தழம்பல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.


அந்த வகையில் தாழ்வான நிலப்பரப்புக்கள் அனைத்தும் மழை நீர் நிரம்பிக் காணப்படுவதோடு பல கிராமங்களிலுமுள்ள அனைத்து உள் வீதிகளும் மழை நீரில் மூழகியுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது.


இவற்றினைவிட கடந்த ஓகடஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வரட்சியினால் முற்றாக வற்றிப்போன சிறிய, சிறிய. குழங்கள் யாவும் தற்போது பெய்து வரும் மழையினால நிரம்பியுள்ளன.


களுவாஞ்சிகுடி வடிட்டிக்குளம், களுதாவளைக்குளம், போரதீவு பெரியகுளம், வெல்லாவெளிக் குளம், மற்றும் கோவில்போரதீவு, பழுகாமம், போன்றவற்றில் அமைந்துள்ள குளங்களும் தற்போது பெய்துவரும் மழையினால் நிரம்பியுள்ளன.


இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகிய மழை வீழ்ச்சியைப் பார்க்கும்போது மட்டக்களப்பு நகரில் 32.3 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 7.0 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், தும்பங்கேணிப் பிரதேசத்தில் 13.1 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், வாகனேரிப் பிரதேசத்தில் 35.7 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், கட்டுமுறிவு குளம் அமைந்துள்ள பகுதியில் 17.3 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 16.0 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 13.4 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், பாசிக்குடா பிரதேசத்தில் 11.0 மில்லி மீற்றர் மழை விழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் நிலையப் பெறுப்பதிகாரி கே.சூரியகுமாரனை தொடர்பு கொண்டு கேட்டபோது கூறினார்.


இந்நிலையில் நவகிரிக்குளம் 24 அடி 9 அங்குலம் நீர் மட்டம் காணப்படுவதாக நவகிரிப் பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.மயூரன் தெரிவித்தார்.


இதேவேளை உன்னிச்சைக் குளம் 26 அடி 7 அங்குலம் நீர் மட்டமும், உறுகாமம் குளம் 15 அடி 6 அங்குலம் நீர் மட்டமும், வாகனேரிக்குளம் 18 அடி 6 அங்குல நீர் மட்டமும் கட்டு முறிவுக்குளம் 12 அடி 6 அங்கும் நீர் மட்டமும், காணப்படுவதாக இக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.கேமகாந்த கூறினார்.


இந்நிலையில் மட்டக்கள்பபு மாவட்டத்தில் தற்போது பெய்து வருகின்ற மழையினால் பாதிப்புக்கள் ஏதும் எற்பட்டுள்ளாதா என்பது தொடர்பில்  மட்டக்களப்பு மாவட்ட அனர்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜனை பலமுறை தொடர்பு கொண்டபோதும் அது பலனளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.












SHARE

Author: verified_user

0 Comments: