15 Nov 2014

தேசிய கல்விக் கல்லூரிக்கு நேர்முகத் தேர்வில் சித்தி பெற்றும் அனுமத கிடைக்கவில்லை

SHARE


2013ம் ஆண்டிற்கான தேசிய கல்விக் கல்லூரியில் புதிய பயிலுனர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் கல்வி அமைச்சினால் கோரப்பட்ட நிலையில் அதிகஷ்ட பிரதேசமான அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் 13ம் கிராமத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை சுலோஜனா என்ற யுவதி வர்த்தமானி அறிவித்தலின் படி சமுக விஞ்ஞான கற்கை நெறிக்கு மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தார்.



இதற்கமைவாக நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு தேர்வில் சித்தி பெற்றதன் பயனாக மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரிக்கு சமுக விஞ்ஞான பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். பதிவினை மேற்கொள்வதற்காக சகல ஆவணங்களுடனும் 30.08.2013 ம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு சமுகமளிக்குமாறு பீடாதிபதியின் பதவி முத்திரை இடப்பட்ட கடித்திற்கு அமைவாக கற்கை நெறியில் இணைந்து கொள்வற்கான பொருட்களுடன் பெற்றோருடன் குறித்த தினத்திற்கு சென்ற போது யுவதியின் பெயர் இல்லை எனவும் தவறுலாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இரு தினங்களின் பின்னர் அறிவிப்பதாகவும் பதிவினை மேற்கொண்டிந்த விரிவுரையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

 விரிவுரையாளர்களின் வேதவாக்கினை நம்பிய நிலையில் வீடு சென்று கல்விக்கல்லூரி அனுமதிக்காக காத்திருந்தும் பதில் எதுவும் கிடைக்காத நிலையில் மனவேதனை உற்று பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பெற்றோரினால் காப்பாற்றப்பட்ட நிலையில் பின்னர் தனது உறவினர்களுடன் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போது தவறு நடை பெற்றுள்ளதாகவும்.பழைய. புதிய பாடத்திட்ட தெரிவில் உள்ள தவறு எனவும் இவ்வாறான தவறினை கல்வி அமைச்சுதான் மேற்கொண்டதாகவும் தங்களில் எதுவிதமான தவறும் இல்லை எனவும் இவ்வாறான பதிலை எங்கு சென்றாலூம் கூறுவேன். என பீடாதிபதி உறுதிபடக் கூறியிருந்தார்.

பீடாதிபியின் கருத்தினை ஏற்றுக்கொள்ளாத பாதிக்கப்பட்ட யுவதியின் பெற்றோர் இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர். ஜனாதிபதியின் செயலாளர் போன்றோரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக மாதர் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட கல்விச் சமுகத்தினர் தெரிவித்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: