9 Nov 2014

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என அம்பாறை மாவட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

SHARE
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என அம்பாறை மாவட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

இது சம்பந்தமாக ஆராயும் கூட்டம் அம்பாறை மாவட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் தேசகீர்த்தி ஐ.எஸ்.ஏ.வஹாப் தலைமையில் அம்பாறை நகர சபை சுற்றுலா விடுதியில் நேற்று இடம்பெற்றது.

இதில் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் பிரதான செயலாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஏ.டி.ஜகத்குமார, பிரதான பொருளாளர் எம்.எம்.பாசில் அன்வர் உள்ளிட்ட தொழிற்சங்க உத்தியோகத்தர்கள்;, அம்பாறை மாவட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்;ச்சி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சம்பள மாற்றங்கள், பதவி உயர்வுகள், ஊழியர் சேமலாம நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதங்கள், உத்தியோகத்தர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்கல் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து அவரின் வெற்றிக்காக கிராம மட்டத்தில் எவ்வாறான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் பற்றி ஆராயப்பட்டதுடன் அதற்காக தகவல்களை திரட்டும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 18 வருடங்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களை ஓய்வூதிய திட்டத்திற்குள் இணைத்துக் கொள்ளும் பொருட்டு அரசாங்கம் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தினை உருவாக்கி அதனுள் இவ்வுத்தியோகத்தர்களை உள்வாங்கியமையையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் திவிநெகும சட்ட மூலத்தினை பாராளுமன்றத்திலும், கிழக்கு மாகாண சபையிலும் நிறைவேற்றுவதற்கு உதவிய அம்பாறை மாவட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: