மட்டக்களப்பு
புனித மிக்கேல் கல்லூரியின் ஜுனியர் கூடைப்பந்தாட்ட வீரர்கள் இருவருக்கு
இருவார கால பயணத்தை மேற்கொண்டு அமெரிக்கா சென்று வருவதற்கான
அமெரிக்காவுக்கான புலமைப்பரிசில் சனிக்கிழமை (08) வழங்கப்பட்டது.
அமெரிக்காவில்
நடைபெறவுள்ள கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியைப்; பார்வையிடுவதற்காக
ரூபாய் 1.2 மில்லியன் சோண் மோகன்ராஜ் மற்றும் சரோண் சுரேஸ் ரொபட்
ஆகியோருக்கு அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே. சிசனினால் இப்பணம்
வழங்கப்பட்டது.
புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் இருவர் உட்பட இலங்கையிலிருந்து 6 பேர் அமெரிக்கா செல்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (09) பயணமாகும் இரு வீரர்களுக்குமான பிரையாண ஏற்பாடுகளை அருட்தந்தை மில்லர் நூற்றாண்டு விழாக்குழு மற்றும் சிவில் சமூகம் என்பன இணைந்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment