இந்த ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் பாரியளவிலான அபிவிருத்திகள் நடைபெற்றுள்ளன ஆனால் மக்கள் மத்தியில் பொருளாதார ரீதியான அபிவிருத்திகள் இதுவரையில் நடைபெற்றது குறைவாகத்தான் இருக்கின்றன. இதனை நானும் எற்றுக் கொள்கின்றேன். இவ்வாறான மக்களின் பொருளாதாரத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கிளைகள் கிராமங்கள் தோறும் அமைக்கப்படல் வேண்டும். அவ்வாறு அமையப் பெற்றால்தான் இன்னும் மென்மேலும் பாரிய அபிவிருத்திகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கிளைகளினூடாகக் கொண்டு செல்ல முடியும்.
என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாற்றில் ஞாயிற்றுக் கிழமை (09) இரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கிளை ஒன்றை அமைத்துவிட்டு மக்கள் மத்தியில் பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்….
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது பலமிழந்து நிற்கின்றது. வெறும் உணர்ச்சி வார்த்தைகளை மாத்திரம் மக்கள் மத்தியில் விதைத்து மக்களை ஏமாற்றி வருகின்றது. ஏனெனில் அவர்களால் எந்த விதமான அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியாது. இவ்வாறானவர்களின் பின்னால் மக்கள் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பளாராகப் பெறுப்பேற்று ஒன்றரை வருடங்களாகின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்காகத்தான் இங்கு நான் வந்து வேலை செய்வதாக பலர் கூறுகின்றார்கள். உண்மையிலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் பட்டிருப்புத் தொகுதி மக்கள் எமது ஜனாதிபதி மஹிந்த ராஸபக்சவுக்கு வாக்களிக்கவில்லை மாறாக பட்டிருப்புத் தொகுதி மக்கள் எதிர்த்துத்தான் வாக்களித்திருந்தார்கள். இவ்வாறு தோல்வியடையும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எமது பட்டிருப்புத் தொகுதி மக்கள் தொடர்ந்து வரும் ஜனாதிபதித் தேத்தல்களில் வாக்களித்து வந்தால்; எவ்வாறு பட்டிருப்புத் தொகுதியை அபிவிருத்தி செய்ய முடியும்.

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி மக்கள் வாக்களித்தாலும், வாக்களிக்கா விட்டாலும்சரி மஹிந்த ராஜபக்ஸதான் மீண்டும் ஜனாதிபதிகாக வரப்போகின்றார். மஹிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதியிலிருந்து அசைக்க முடியாது. மாறாக இங்குள்ளவர்கள் வீர வசனம் பேசிக்கொண்டு இந்த ஜனாதிபதியை ஆதரிக்கமாட்டோம் எனக் கூறினால் அதனால் ஏற்படும், விளைவுகளும் எமது மக்களுக்குத்தான் வரப்போகின்றது.
வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்க, சோபித தேரர், மஹிந்த ராஜபக்ஸ, ஆகியோர்கள்தான் போட்டியிடுவார்கள் என பேசப்படுகின்றது. இதில் ஜனாதிபதியாகப் போபவர் மஹிந்த ராஜபக்ஸ மட்டும்தான் என்பது தற்போதே உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.
வாக்களிப்பது ஒரு மனிதனின் உரிமையாகும், அதனை பலாத்தகாரமாக மஹிந்த ராஜபக்ஸவுக்கு அளியுங்கள் என நான் கூறவில்லை ஆனால் எதிர் காலத்தில் உங்கள் கிராமதின் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் மஹிந்த ராஜபக்ஸவுக்கு வாக்களியுங்கள் என்றுதான் கூறுகின்றேன்.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். அவரிடம் இக்கிராம மக்கள செல்லாமல் சிறிய சிறிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வேண்டி என்னிடம் வருகின்றார்கள் என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எதுவும் செய்யமுடியாது என்பதாகும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்கின்றது அரசாங்கத்தை எதிர்த்து, அகிம்சை வழியாகப்போராடி தமிழ் மக்களின் உரிமையினைப் பெற்றெடுக்கலாம் எனக் கூறுகின்றது. ஆனால் நான் கூறுகின்றேன், அரசாங்கத்தை ஆதரித்து, அபிவிருத்திகளை மேற்கொண்டு அரசாங்கத்துடன் பேசி தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றெடுக்கலாம் எனக் கூறுகின்றேன். இந்த இரண்டு நோக்கம்களும் ஒன்றுதான்.
நான் ஒரு அமைப்பாளராக இருந்து கொண்டு பட்டிருப்புத் தொகுதியில் வீதி அபிவிருத்தி செய்தல் தென்னங் கன்றுகளை வழங்குதல் போன்ற சில சிறிய வேலைத் திடங்ளை மேற்கொண்டு வருகின்றேன் இந்நிலையில் நான் ஒரு அமைச்சராக இருந்தேன் என்றால் பட்டிருப்புத் தொகுதியை குறிப்பிட்ட காலத்திற்குள் பாரிய அபிவிருத்திகளைச் செய்து மாற்றங்களை ஏற்படுத்தி விடுவேன்.
நான் 3 ஆம் ஆண்டு வரைப் படித்துவிட்டு காட்டிலிருந்து விட்டு இந்து இங்கு வந்துள்ளேன் என நினைக்கக் கூடாது. நான் படித்தவன் மக்களைப்பற்றி நன்கு அறிந்தவன், நான் அவுஸ்ரேலியாவில் 8 லெட்சம் மாதாந்தம் சம்பாதித்தவன் அதனை விட்டு விட்டு எமது மக்களின் அபிவிருத்தியை நோக்காக் கொண்டு இங்கு வந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினூடாக வேலை செய்கின்றேன்.
இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல் பொருளதார ரீதியில் மக்களை உயர்த்துதல், போன்ற வேலைத் திட்டங்களை மிகவிரைவில் இந்த பட்டிருப்புத் தொகுதியில் மேற்கொள்ளவுள்ளேன். என அவர் மேலும் தெரிவித்தார்.
த.சிவராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோட்மைக் கல்வாறு கிராமத்தைச் சேர்ந்த பலர கலந்து கொண்டிருந்தனர். இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டைக்கல்லாறு கியைளின் தலைவராக உ.யுவானந்தராச தெரிவு செய்யப்பட்டார்.

0 Comments:
Post a Comment