மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
தாண்டவன்வெளி திருமலை வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பல் 3.45 மணியளவில்
இடம்பெற்ற விபத்தில் கூழாவடியைச் சேர்ந்த 13 வயதான அ.கேசாந் என்ற மாணவன்
சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளான்.
விபத்தில் கால் வேறு உடல் வேறான நிலையில் சடலம் வீதியில் வீசப்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்
0 Comments:
Post a Comment