29 Nov 2014

விதைநெல் வழங்குவதற்கு நிதி திட்டமிடல் அமைச்சினால் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

SHARE
அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு 2015ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்ட யோசனைப்படி, விதைநெல் வழங்குவதற்கு நிதி திட்டமிடல் அமைச்சினால் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படடுள்ளதாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள 73,125 விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 2 புசல் வீதம் 5 ஏக்கர் வரை விதை நெல் மாணியம் வழங்கப்படவுள்ளது.

விதைநெல் ஒரு புசல் 1,400 ரூபாய் படி ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு புசல் நெல் வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 2,800 ரூபாய்  வீதம் பணம் வழங்கப்படவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 75,000 ஏக்கர் பெரும்போக வேளாண்மை செய்கை செய்யப்பட்டுள்ளது.  2014/2015 நிவாரணம் பெரும்போக வேளாண்மை செய்யும் உரமானியம் பெறும் விவசாயிகளுக்கே விதைநெல் நிவாரணமாக பணம் வழங்கப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: