17 Nov 2014

இவ்வருடத்தில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் 31 டெங்கு நோயாளர்கள் இனங்காணப் பட்டுள்ளார்கள்

SHARE

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிவுக்குட்பட்ட செட்டிபாளையம் கிராமத்தில் கடந்த இரு வாரங்களுக்குள் ஏழு டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப் பட்டுள்ளதாகவும், டெங்கு நுளம்பு பரவும் இடங்களை வைத்திருந்ததாகக் கருதப்படும் 20 குடும்பங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுப்பட்டதோடு மேலும் 4 குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஸ்ணகுமார் கூறினார்.

செட்டிபாளையம் கிராமத்தில் டெங்கு நுளம்புகள் அதிகரித்து வருவதனைக் கட்டுப்படுத்தும் திடீர் விழிப்பணர்வு நிகழ்வு ஒன்று நேற்று ஞாயிற்றுக் கிழமை (16) மாலை  செட்டிபாளையத்தில் இடம் பெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழிப்;புணர்வு நிகழ்வில் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஸ்ணகுமார், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தலால்;, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.திருச்செல்வம், மற்றும் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து  பொதுமகளுக்கான விழிப்புணர்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பொது மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஸ்ணகுமார் இவ்வாறு கூறினார்.

இந்த வருடத்தில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் 31 டெங்கு  நோயாளர்கள் இனங்காணப் பட்டுள்ளார்கள். இதில் அதிகமாக செட்டிபாளையம் கிராமத்தில்தான் இனம் காணப் பட்டுள்ளது. தற்போதைய நிலையிலும் செட்டிபாளையம் கிராமத்தில் சாதாரணமாக டெங்கு  நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடையத்தில் பொதுமக்கள்  மிகவும் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். நுளம்புகள் பரவும் இடங்களை  தவிப்பதற்கான நடவடிக்கை பொதுமகள்  மேற்கொள்ள வேண்டும். நுளம்புகள் மக்கள் பாவித்து விட்டு வீசும் கழிவுப் பொருட்களில் இருந்துதான் அதிகமாக பரவுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்லிவில் கலந்து கொண்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் கருத்து தெரிவிக்கையில்…

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் டெங்கு நோய் பரவுவது தொடர்பாக  நான் கூடுதலான கவனம் செலுத்தவுள்ளேன். இதே போன்று இப்பிரதேசத்தில் அமைந்துள்ள கிரமங்கள் தோறும் கருத்தரங்குகளை  நடாத்த வேண்டும். எவரும் அனியாயமான மரணத்திற்கு ஆளாகக் கூடாது எனத் தெரிவித்தார்




SHARE

Author: verified_user

0 Comments: