5 Nov 2014

போரதிவுக் கல்விக் கோட்டத்தில் 3 கணணி ஆய்வு கூடங்கள் திறந்து வைப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டம்  படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதிவுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மண்டூர் 13 விநாயகர் வத்தியாலயம், ஆனைகட்டியவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, சின்னவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, ஆகியவற்றில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட கணணி ஆய்வு கூடங்களை தகவல் தொழில் நுட்ப பிரதி அமைச்சர் பிரபா கணேசனினால் இன்று புதன் கிழமை (05) திறந்து வைக்கப் பட்டது.


இக்கணணி ஆய்வு கூடங்கள் தயட்டக் கிருள தேசத்திற்கு மகுடம் - 2013 அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஒவ்வொன்றும் 45 லெட்சம் ரூபாய் செலவில் நிருமாணிக்கப் பட்டுள்ளன.


இந்த கணிணி ஆய்வு கூடங்களின் திறப்பு விழா விகழ்வில் தகவல் தொழில் நுட்ப பிரதி அமைச்சர் பிரபா கணேசன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம், மட்டக்களப்பு கச்சேரியின் உதவித்திடமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன், உட்பட போரதீவுக் கல்விக் கோட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்













SHARE

Author: verified_user

0 Comments: