6 Nov 2014

வரட்சி நிவாரணமாக 15190 கிலோ உருளைக் கிழங்கு வழங்கி வைப்பு.

SHARE
(ஜனா)


மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வரட்சியனால் பாதிக்கப்பட்ட சமூர்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கு இன்று திங்கட் கிழமை (03) திவிநெகுமவாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒரு தொகுதி உருளைக் கிழங்குகள் வெல்லாவெளியில் அமைந்துள்ள திவிநெகுமவாழ்வின் எழுச்சி காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டன.

இதன்போது போரதீவுப்பற்று பிரதேசத்தின் 43 கிராமசேவையாளர் பிரிவிலுமுள்ள தெரிவு செய்யப்பட்ட 7595 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கிராம் உருளைக் கிழங்கு வீதம் 15190 கிலோ கிராம் உருளைக் கிழங்குகள் இதன்போது வழங்கப் பட்டதாக போரதீவுப் பற்று பிரதேசத்தின் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் க.உதயகுமார் கூறினார்.

இந்நிகழ்வில் போரதீவுப் பற்று பிரதேச வாழ்வின் எழுச்சித்திட்ட முகாமையாளர் திருமதி.புவனேஸ்வரி ஜீவகுமார், மற்றும் திவநெகும உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்
SHARE

Author: verified_user

0 Comments: