6 Nov 2014

சக்தி மிக்க சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்கு ஊடகத்துறை இன்றியமையாதது - வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன்

SHARE

சக்தி மிக்க சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்கு ஊடகத்துறை இன்றியமையாதது, ஏனெனில் ஊடகவியலாளர்களின் தொழிற்பாடு மக்களிடத்தில் காணப்படும் பிரச்சனைகளை ஆய்வு செய்து, சிறந்த முறையில் நடுநிலையான வகையில் அறிக்கையிடுவதாகும். அந்த வகையில் ஊடகவியலாளர்களின் பங்கு சமூகத்தில் இன்றியமையாததாகும் இதில் எந்த விதமான மாற்றுக் கருத்துக்களுமில்லை.


என மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்திட்சகர் கு.சுகுணன் தெரிவிதுள்ளார்.


கிழக்கிலங்கை இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக் கூட்டம்  ஞாயிற்றுக் கிழமை (02) களுவாஞ்சிகுடி சைவ மகா சபை கட்டிடத்தில் அதன் தலைவர் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவரஜாவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்குகைகயில்…


பொதுவாக ஊடகவியலாளர் எனும்போது நடுநிலையானவர் எனும் பதாகை அவர்களிடத்தில் தொங்க விடப் பட்டுள்ளது.  கடந்த காலங்களில் நாம் பல பிரச்சனைகளை எதிர் கொண்டிருந்தோம், சமயம், இனம், பிரதேசம் போன்ற பல விடையங்களில் ஓரம் கட்டப்பட்டிருந்தோம்.  ஆனால் தற்போதைய காலகட்டத்தில் எமது சமூகத்தை நல்வழிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு கிழக்கிலைங்கை இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் முன்னின்று செயற்பட வேண்டும்.


பொதுவாக ஊடகவியலாளர்கள் அவர்களது கல்வித் தகமைகளையும் திறக்களையும், மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மனப்பாங்கை சிறந்த முறையில் பேணவேண்டும். கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற விடையங்களை உள்வாங்கக் கொண்டு செயற்பட வேண்டும்.


ஊடகவியலாளர்களால் வழங்கப்படும் தகவல்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உறுத்திப் படுத்திக் கொள்ள வேண்டும். சரியான உள்ளகத் தகவல் எனப்படும் எக்ஸ்றே றிப்போட்டினை வழங்க வேண்டும். ஆய்வுகளை மேற்கொண்டு  தேடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும். எனக் குறிப்பட்ட அவர்.


ஊடகவியலாளர்கள், தமிழ் மொழியில் மட்டும் அறிக்கைகளை வெளியிடுவதோடு நின்றுவிடாமல், ஆங்கில மொழியிலும். ஏனைய சகோதர மொழியிலும் எமது மக்களின் தகவல்கள் வெளிக்கொணர வேண்டும் என அவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: