30 Nov 2014

SHARE
களக்கூறு - 1 எனும்  தொனிப்பொருளில் நடைபெற்ற ஆசியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தின்  5 கல்வி வலையங்களில் 4 வலையங்களிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் ஜனாதிபதி சாரணியர்கள் உட்பட 42 பேர் பங்கு கொண்டதாக மாவட்ட ஆணையாளர் பி. ஆனந்தராஜா தெரிவித்தார்.

தலைமைத்துவம், ஆளுமை மற்றும் சகிப்புத்தன்மை என்பவற்றை வளர்க்கும் நோக்கோடு சாரண ஆசிரியர் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி மட்டக்களப்பு இந்துக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (29) இடம்பெற்றது.

இலங்கை சாரணியர் சங்க தலைமைச் செயலக ஆணையாளர் எஸ். சவுந்தரராஜா பயிற்சியை வழங்கினார்.

மேலும், உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரணர் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: