13 Mar 2014

காட்டு யானைகள் விரட்டியடிப்பு

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் கூட்டமாக தங்கியிருந்த காட்டு யானைகளை நேற்றயதினம் (08) போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் கலைக்கபட்டு விரட்டியடிக்கப்பட்டன.

மட்டக்களப்பு வன விலங்கு இலாகா பிரிவினரின் உதவியுடன் அப்பிரதேச பொதுமக்களும் இணைந்து இச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது 15 அதிகமான காட்டுயானைகள் போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள விவேகானந்தபுரம் கிராமத்திற்கு அருகிலிருந்த காட்டுப்பகுதியில் நின்றதாகவும், அவைகளை யானை வெடிகள் வைத்தும், சத்மிட்டும் யானைகளைக் கலைத்ததாகவும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் தெரிவத்தார். 






SHARE

Author: verified_user

0 Comments: