13 Mar 2014

நோர்வேநாட்டின் இளைஞர் அணியின் செயற்பாடுகள்

SHARE



மட்டக்களப்பு மாவட்டத்தின் கிருஸ்தவ இளைஞர் சம்மேளனத்தின் தலைமைக் காரியாலயத்தின் அழைப்பை ஏற்று நோர்வே நாட்டின் ரென்சிங் (வுநளெiபெ)  என அழைக்கப் படுகின்ற 25 பேர் கொண்ட இளைஞர் அணி ஒன்று கடந்த திங்கட் கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.
இவர்கள் மட்டக்களப்பின் பல இடங்களுக்கு சென்று மாவட்டத்தின் கலை கலாச்சார மற்றும் தமிழ் பண்பாடுகள் தொடர்பாக அறிந்து கொண்டதுடன் மாவட்ட இளைஞர், யுவத்திகளுக்கு ஆடல் பாடல் போன்ற துறைகளையும் பயிற்றுவித்துள்ளனர்.
இக்குழுவினரை வரவேற்கும் நிகழ்வு மாவட்டத்தின் கிருஸ்தவ இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் டேவீட் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. 
மாவட்டத்தின் கிருஸ்தவ இளைஞர் சம்மேளன அமைப்பின் பிரதான காரியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் திட்ட இணைப்பாளரும் நிகழ்ச்சிக்கான ஒழுங்கமைப்பாளருமான சா.கிருஸாந்தி அவர்களினால் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ (லுஆஊயு) ஆரம்பிக்கப்பட்டமை அதன் செயற்பாடுகள் அதில் அங்கம் வகிக்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் புதிய செயற்பாடுகள் தொடர்பாக வருகைதந்திருந்த குழுவினருக்கு விளக்கமளிக்கப் பட்டன. 
நோர்வே நாட்டின் ரென்சிங் (வுநளெiபெ)  இளைஞர் அமைப்பின் தோற்றம் செயற்பாடுகள் தொடர்பாக அக்குழுவிலிருந்து வருகைதந்திருந்த ஊடநயச என்பவர் மூலம் மட்டு மாவட்ட குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டன.
இவர்கள் மட்.திருப்பெருந்துறை வித்தியாலயத்திற்குச் சென்று பாடசாலை மாணவர்களுடன் ரென்சிங் (வநயளெiபெ) செயற்பாடுகள் விளையாட்டுகள் தொடர்பாக பயிற்சி வழங்கியதுடன், தமிழர் பண்பாடுகள் கலாச்சாரம் தொடர்பாகவும், ஆண்கள், வேட்டிகட்டுதல், பெண்கள், சாரிஉடுத்தல், மற்றும் கலாசார நடனங்கள் கூத்து கும்மி, வேடர், நடனம் போன்றவை, தொடர்பாக ரென்சிங் (வுநளெiபெ)  குழுவினர் கேட்டு அறிந்து கொண்டனர். 
இக்குகுவினர் தமது செயற்பாடுகளை முடித்துக் கொண்டு நேற்று தமது நேர்வே நாட்டிற்கு பயணமாகியுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: