21 Mar 2014

ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வரலாற்றுச் சிறப்பு நூல் வெளியீட்டு விழா

SHARE

 (சக்தி)

மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வரலாற்றுச் சிறப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று திங்கட் கிழமை (17) மாலை  தேற்றாத்தீவு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய முன்றலில் இடம் பெற்றது.
ஆலய பரிபாலன சபைத் தலைவர் நா.தயாநிதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதை கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன்-கருணாகரம், மற்றும் மதத் தலைவர்கள், கிராம அமைப்புக்களின பிரத்திநிதிகள் அதிபர்கள், ஆசிரியர்கள், ஆலய நிருவாகிகள், பொதுமகள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தேற்றாத்தீவு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புக்கள், தேற்றாத்தீவு கிராமத்தின் தொன்மை, காளி அம்மன் வழிபாட்டு முறைகள் போன்ற பல அம்சங்கள் இந்நூலில் அடங்கியுள்ளது.
இந்நூலை தோற்றாத்தீவு கிராமத்தினைச் சேர்ந்த கனகசூரியம்-ஜெயசூரியன் அவர்கள் எழுதியுள்ளார்.
இந்நூலின் வெளியீட்டு உரையிரை அதிபர் இரா.கோபாலபிள்ளை அவர்கள் நிகழ்த்தினார். நூலின் முதற் பிரதியினை நூலாசிரியரிமிருந்து கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன்-கருணாகரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
















SHARE

Author: verified_user

0 Comments: