13 Mar 2014

மட்டக்களப்பு சர்வோதய அமைப்பின் செயற்றிட்டங்களில் இவ்வருடத்திற்குரிய வேலைத்திட்டமாக மலேரியாநோய்த் தடுப்பு செயற்பாடு நடைமுறைப் படுத்தப் பட்டுக் கொண்டு வருகின்றன.

SHARE


மட்டக்களப்பு சர்வோதய அமைப்பின் செயற்றிட்டங்களில் இவ்வருடத்திற்குரிய வேலைத்திட்டமாக மலேரியாநோய்த் தடுப்பு செயற்பாடு நடைமுறைப் படுத்தப் பட்டுக் கொண்டு வருகின்றன.
இவ்வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக மலேரியாநோய் அதிகளவில் தாக்கம் செலுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் மலேரியா நோய் தொடர்பான கருத்துக்கள் அடங்கிய 2700 புத்தகங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்றுகாலை (09) சர்வோதய அமைப்பின் உத்தியோகபூர்வகாரியாலயத்தில் அதன் சமூக ஒருங்கிணைப்பானர் கே.மதனகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி திருமதி. கே.ரவிச்சந்திரன், சர்வேதய அமைப்பின் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான இணைப்பாளர் ஏ.எல். ஹரீம், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்புமேற்கு போன்றவலயங்களில் உள்ளபாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்கள் அடங்கலாகபலரும் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு அமைப்பின் மலேரியா வேலைத்திட்டம் தொடர்பாக பிராந்தியத்தின் சுகாதாரவைத்திய அதிகாரி அவர்களினால் விளக்கம் கொடுக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கான மலேரியா தொடர்பான விழிப்புணர்வுகருத்துக்கள் அடங்கிய புத்தகங்களும் தினக் கலன்டர்களும் வழங்கி வைக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: