13 Mar 2014

ஒர் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் கலாச்சாரம், பொருளாதாரம், நிலம் இடங்கள், மதம், மொழிகள், அரசியல், அதிகாரங்கள் போன்றவற்றைத் திட்டமிட்டு பறித்துக் கொள்வதே இனப்படுகொலை-கமலதாஸ்

SHARE

(சக்தி)      
இனப் படுகொலை என்பது ஒவ்வொரு இன வளர்ச்சிக்கும் அவற்றின் தனிப் பண்பாடுகள், கலாச்சாரங்கள் முக்கியத்துவமானது உலகமயமாக்கல் என்ற போர்வையில் கீழ் பலதனித்துவ இயல்புகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒர் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் கலாச்சாரம், பொருளாதாரம், நிலம் இடங்கள், மதம், மொழிகள், அரசியல், அதிகாரங்கள் போன்றவற்றைத் திட்டமிட்டு பறித்துக் கொள்வதே இனப்படுகொலை எனப்படும். இது தொடர்பாக ஜக்கியநாடுகளிலும் கூறப்பட்டுள்ளது.
என மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் பட்டிப்பளை பிரதேசத்திற்கான பொதுக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவர் ஞா.துரையப்பா அவர்களின் தலைமையில் நேற்று (09) கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் சிவன் ஆலயத்தின் முன்றலில் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் கலாச்சார உத்தியோகஸ்தர், மற்றும் பட்டிப்பளைப் பிரதேசத்திற்குட்பட்ட இந்து  ஆலயங்களின் தலைவர்கள், மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்குகையில்

பலஆண்டு காலமாக படுவான்கரை மக்கள் கஸ்டத்தின் மத்தியிலும் யுத்தத்தின் மத்தியிலும் மண்முனைப் பாதையைப் பயன்படுத்தி வந்த போதிலும் தற்போது பாலம் நிர்மானிக்கப் பட்டுள்ளது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும் ஆனால் பாலம் திறப்பதனால் எமதுபடுவான்கரை வாழ் மக்களினது பொருளாதாரம் சூறையாடப்பட்டு திருட்டுகள் அதிகரித்துவிடும். ஆடு, மாடுகள், வாகனங்களை கொண்டு வந்து நேரடியாக களவாடப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்.

தற்போது இப்பகுதியில் அபிவிருத்தியடைந்த பிரதேசத்தவர்கள் உள்ளுர் மக்களை மயக்கி அவர்களது பொருளாதார நிலையை குறைத்து வறுமைக் கோட்டில் வாழவைக்கின்றனர். அத்துடன் இன உணர்வுகள் அழிக்கப்பட்ட நிலையில் இன துவேசம் பாரம்பரிய பண்பாடு போகும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது ஆகையால் இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர்களினாலும் சிவில் குழுக்களினாலும் கிராம மக்களைக் காப்பாற்ற கூடியகவனம் எடுக்க வேண்டும்.
இனப் படுகொலை என்பது ஒவ்வொரு இன வளர்ச்சிக்கும் அவற்றின் தனிப் பண்பாடுகள், கலாச்சாரங்கள் முக்கியத்துவமானது உலகமயமாக்கல் என்ற போர்வையில் கீழ் பலதனித்துவ இயல்புகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒர் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் கலாச்சாரம், பொருளாதாரம், நிலம் இடங்கள், மதம், மொழிகள், அரசியல், அதிகாரங்கள் போன்றவற்றைத் திட்டமிட்டு பறித்துக் கொள்வதே இனப்படுகொலை எனப்படும். இது தொடர்பாக ஜக்கியநாடுகளிலும் கூறப்பட்டுள்ளது.
எனவே பட்டிப்பளை வாழும் மக்கள் அற்ப செற்ப பொருளாதார இலாபங்களுக்காக தங்களுடைய தனித்துவமிக்க கலாச்சார பாரம்பரியங்களை இளந்து விடக்கூடாது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
இக்குகூட்டத்தில் தற்போது நிர்மானிக்கப் பட்டுவரும் படுவான்கரைப் பகுதியிலுள்ள பட்டிப்பளைப் பிரதேசத்தினையும் எழுவான்கரைப் பகுதியிலுள்ள ஆரையம் பதி பிரதேசத்தினையும் இணைக்கும் மண்முனைப் பாலம் திறக்கப்பட்டதன் பின்னர் படுவான்கரை பிரதேசமக்கள் எதிர்நோக்க உள்ளசமூக, கலாசார, சமய, பொருளாதார அச்சுறுத்தல்கள். தொடர்பாக தீர்வுகாண்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.
குறித்த பாலம் திறக்கப் பட்டதன் பின்னர் குறிப்பாக இப்பிரதேசமக்கள் எதிர்நோக்க உள்ள சமூகசீர்கேடுகள் மற்றும் பொருளாதாரவீழ்ச்சிகள் போன்ற விடயங்கள் தொடர்பாக பலதுண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன அவை முஸ்லிம் தமிழ் சமூகத்தைப் பாதிக்குமா எனவும் கலந்துரையாடப்பட்டன. 
இறுதியில் இக்கூட்டத்தில் கீழ்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட
01.பொதுமக்களது பொருளாதாரத்தை விருத்தி செய்வது தொடர்பாக கொள்வனவு கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு தகவல் மையம் ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தல்,
02.பிரதேசத்திற்குள் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாடினால்  அவை தொடர்பாக ஆலய குழுக்கள் சிவில் குழுக்கள் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் கண்காணிப்பில் ஈடுபடல், 
03.பட்டிப்பளை பொலிஸாரிடம் மகிழடித்தீவு சந்தியில் 24 மணிநேர காவலரண் அமைத்து தரும்படியும் கோரிக்கை விடுத்தல்,
04.வருடாவருடம் நடைபெறும் ஆலய திருவிழாக்களில் கொளுத்தப்படும் பட்டாசுகளைத் தவிர்த்து அதற்குரிய பணத்தை வறிய பாடசாலை மாணவர்களுக்கு கொடுத்தல்,
05. ஆலய நிதியறிக்கைகள் பிரதேசசெயலகம் ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
போன்ற தீர்மானங்கள் எடுக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும

SHARE

Author: verified_user

0 Comments: