(துசாந்தன்)
மட்டக்களப்பு - முதலைக்குடா ஸ்ரீ பாலையடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவின் ஐந்தம் நாளாகிய நேற்று முன்தினம் (17) இரவு மாலை 06.00மணிக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து விஷேட பூசையுடன் சுவாமி வீதியுலா நிகழ்வும் மிகவும் சிறப்பான முறையில் நடை பெற்றது. இதன் போது அதிகளவான பக்தர்கள் கலந்து பூசை ஆராதனைகளை கண்டுகளித்தனர்.
இவ் ஆலயத்தின் உற்சவமானது கடந்த 15 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமானதுடன் 17 திகதியன்று சங்காபிஷேகம் நடைபெற்றது. நேற்று (18) செவ்வாய்க்கிழமை காலை தீர்தோற்சவமும் தொடர்ந்து திருப்பொன்னூஞ்சலும் இடம்பெற்று மகேஸ்வர பூசை என்பன நடைப் பெற்று, மாலை வைரவர் பூசையுடன், வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவின் நிறைவு பெற இருக்கின்து.
இவ் உற்சவகால பூசையினை களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயம், கொக்கட்டிச்சோலை திருத் தாந்தோன்றீஷ்வரர் ஆலயங்களின் பிரதமகுரு சிவஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக்குருக்கள், பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ. மு.கு.சபாரத்தினக்குருக்கள், ஆலய குரு சிவஸ்ரீ.சிவசூரியம் குருக்கள் ஆகியோர் இணைந்து நடாத்தினர்.
0 Comments:
Post a Comment