13 Mar 2014

அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் புற்றுநோயாக 'அதிஉயர் வட்டிக்கான கடன்'அமைந்திருக்கின்றது.

SHARE
ண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் புற்றுநோயாக 'அதிஉயர் வட்டிக்கான கடன்'அமைந்திருக்கின்றது. அந்த உயிர்கொல்லி நோயை எமது மக்களிடம் இருந்து துரத்துவதாக அல்லது ஒழிப்பதாக இருந்தால் நாம் அனைவரும் விழிப்பாக செயற்படவேண்டும். காரணம் நோயாளிக்கு மாத்திரம் தான் பாதிப்பு இல்லை. சூழவுள்ள எமக்கும் அதனால் பாதிப்புதான்; என்பதனை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும.; எதிர் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாரம்பரிய கலை கலாசார அம்சங்களுடன்  சகல சிறப்பு அம்சங்களும் பொருந்தி உயர் பண்பு விழுமியங்கள் கொண்ட அணியாக திகழ நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
'வட்டி தொல்லையிலிருந்து பெண்களை பாதுகாப்போம்'எனும் தொனில் பொருளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம் பெற்ற மகளிர் தின நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும்,கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன் சிறப்புரை ஆற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில, பெண்களுக்கான சமபங்கீடு, அரசியல்உரிமை,கல்வி,மற்றும் சமத்துவம் என்பவற்றை வழங்குகின்ற நாடுகள் யாவுமே எம் கண்முன்னே உயர்ந்த நிலையிலே இருப்பதை நாம் காணலாம். இதனுடாக எமக்கு புலப்படுகின்ற செய்தி என்னவெனில் ஒரு நாட்டினது தன்னிறைவிலேபெண்களது பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்பதே ஆகும்.
இவற்றை எல்லாம் உணர்ந்துதான் பெண்களின் உரிமைபற்றி நினைவு கூர்வதற்கான ஓர் நாளாக இன்றையநாள் திகழ்கின்றது. அதாவது உலகளாவிய ரீதியில் மார்ச் 8ந்; திகதி அதாவது இன்று உலகமகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. எமது மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையிலே அதிகளவிலான பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் இருக்கின்ற ஓர் மாவட்டமாக திகழ்வதோடு மாத்திரமன்;றி, வறுமையிலும் முதலாவது மாவட்டமாக திகழ்கின்றது. இவ்வாறான நிலையிலிருந்து எமது பெண்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் எமது கட்சியின் மகளிர் அணி நேரடியாக மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவின் பிரகாரம் எமது மாவட்டத்திலே உள்ள அதிகளவிலான கிராமமட்ட பெண்கள் பெரும்பாலானோர் உயர்ந்த வட்டி வீதத்திற்கு அதிகளவிலான கடன் தொகையினை பெற்று அதனை ஈடுசெய்ய முடியாத தூப்;பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான பாரிய பிரச்சினைகளில் இருந்து எமது மாவட்ட பெண்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எமதுகட்சியை பொறுத்தவரை ஓர் முக்கியமான தேவையாகும்.
மேலும் குறிப்பிடுகையில்,வட்டிக்கு கடன் பெறுபவர்களுக்கும் வழங்குணர்களுக்கும் எமது கட்சி எதிரானது அல்ல. எமது கட்சியின் எதிர்பார்;ப்பு உயர்ந்த வட்டிவீதத்திற்கு கடன் பெறுவதனை குறைப்பதே ஆகும். அத்துடன் இவர்கள் மேலும் வறுமை நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாப்பதும் எமது கடமையாகும். ஆதனை உண்மையில் செய்யவேண்டியது உயர்மட்ட அதிகாரிகளின் பிரதான பொறுப்பாக இருப்பாதாலும் தவிர்க்க முடியாத சிலகாரணிகளால் கடன் வழங்குணர்களுக்கான அனுமதிவழங்கியும் சிலருக்குவழங்காமல் இருப்பது போலவும் தென்படுகின்றது. காரணம் மத்தியவங்கியானது உண்மையில் கடன் வழங்குகின்ற நிதிநிறுவனங்களுக்கு குறிப்பிட்ட வீதவட்டிமுறைமையினை உறுதி செய்திருக்கின்றது.நேரடியாக மத்தியவங்கி அனுமதி வழங்கினாலும் மாவட்ட செயலாளர்களின் அனுமதியின்றி அதனை அமுல்படுத்த இயலாது. உண்மையில் அதனை உரிய அதிகாரிகள் கரிசனையுடன் ஆராய்து செயற்பட வேண்டும்.
அதே வேளை அதிகளவு பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை கொண்ட மாவட்டம் என்ற வகையிலாவது சிந்தித்து செயற்படுவாராயின் கணிசமான பெண்கள் அதிலும் வட்டி தொல்லையினால் பெண்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு செல்லவேண்டிய தேவை ஏற்படாது.

உண்மையிலே எந்தவொரு கடன் வழங்குகின்ற தனியார் நிதி நிறுவனங்களாக இருந்தாலும் அவர்கள் மாவட்டசெயலாளரினர் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. அவ்வாறு இருந்தும் கூட இவ்வாறான பிரச்சினைகள் இடம் பெறுகின்றது என்றால் பெறுமனே மக்களை மட்டும் நாம் குறைகூற முடியாது. எது எவ்வாறாயினும் எமது மாவட்டத்தை பாதுகாக்கவேண்டிய அதுவம் குறிப்பாக பெண்களுக்கு சமஉரிமை,சமபங்கீடு,அரசியல் பிரதிநிதித்துவம் என்பன உரியவகையில் வழங்குகின்ற ஓர் பொறுப்புமிக்க ஜனநாயக மக்கள் கட்சி என்றவகையில் அதிகாரிகளுக்கும் அப்பால் எமது மாவட்ட மக்களை நாங்களே பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இன்று யுத்தம் முடிவடைந்து எவ்வளவோ பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் எமது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டாலும், வறுமையிலே நாம் முதன்மையான இடத்திலையே உள்ளோம். இதற்கு உண்மையான காரணம் என்னவென்று பார்த்தால், தங்களது வருமானத்திற்கு ஏற்ற செலவு செய்யாமை. மற்றும் அதிஉயர் வட்டிவீதத்திற்கு கடன் பெறுதல். அத்தோடு சுயதேவை பொருதளாதாரத்தை விருத்திசெய்யாமை. என்பனவே முதலில் தென்படுகின்றது.


இவ்வாறானநிலையிலே இன்று கொண்டாடப்படுகின்ற மகளிர் தின நன் நாளிலே எமது கட்சியின் மகளிர் அணி உட்பட மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிபற்றி சிந்திக்கின்ற ஒவ்வொரு குடிமகனும் திடசங்கர்ப்பம் பூணவேண்டும.; இன்றிலிருந்தாவது எமது பெண்கள் பாதிக்கப்படுவதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்ற முடிவுக்கு வரவேண்டும.; இதற்கு நானும் எமது கட்சியும் என்றும் உறுதுணையாக இருப்போம் என்பதனை இன்நாளிலே பகிரங்கமாக கூறிவைத்து எனது உரையினை முடிவு செய்கின்றேன் என அவர் தனதுரையிலே குறிப்பிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: