13 Mar 2014

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு (களுவாஞ்சிகுடி) மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலையில் சர்வதேச தரத்திலான இல்ல விளையாட்டு போட்டி….

SHARE

(சக்தி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு (களுவாஞ்சிகுடி) மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலையில் சர்வதேச தரத்திலான இல்ல விளையாட்டு போட்டி நேற்று செவ்வாய் கிழமை (11) நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் பொன்.வன்னியசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீழ் குடியேற்றப் பிரதியமைச்சர் வி.முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட உதவி செயலாளர் எஸ்.ரங்கநாதன், பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம், மண்முனை தென்எருல் பற்று பிரதேச செயலாளர் ம.கோபாலரெத்தினம், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர கு.சுகுணன் மற்றும் பிரதிக் கல்விப் பணிப் பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், மாணவர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தர்.
இதில் விபுலானந்தர் இல்லம் (சிவப்பு) 234 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும், விவேகானந்தர் இல்லாம் 210 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், 200 புள்ளிகளை இராமகிருஷ்ணா இல்லமும் பெற்று வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டன.
சர்வதேச தரத்திற்கமைய கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக இப்பாடசாலையில்தான் இவ்விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக இப்பாடசாலை அதிபர் பொன்.வன்னியசிங்கம் தெரிவித்தார். 






















SHARE

Author: verified_user

0 Comments: