21 Mar 2014

கிழக்கு மாகாண மக்கள் மீண்டும் அரசியல் ரீதியாக தோல்வி கட்டிருக்கின்றோம்.

SHARE

 (சக்தி)

கிழக்கு மாகாண மக்கள் மீண்டும் அரசியல் ரீதியாக தோல்வி கட்டிருக்கின்றோம் வடமாகாண மக்கள் அதில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். இவைகளை பார்க்கின்றபோது நாங்கள் தோல்வி கண்டாலும் அரசியல் ரீதியாக பயணிக்க வேண்டிய பொறும்பும் வந்திருக்கின்றது.

என கிழக்கு மாககாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகான்தன் தெரிவித்துள்ளார்.

களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால்  “ஆவியா” என்ற குறுந் திரைப்பட வெளியீடடு விழா சனிக்கிழமை களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்குகையில்

இந்த மண்ணிலே இந்த மாகாணத்திலே பிறந்து விட்டொம் போட்டி மிக்க சமூகத்திலே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவற்றினை வைத்துக் கொண்டு எங்களுடைய சமூகத்தினை வளர்க்க வேண்டும்.  இதனை எமது சமூப்பொறுப்பாக நாங்கள் அனைவரும் கருத வேண்டும்.

மிக நீண்ட காலமாக எமத இளைஞர்கள். எழுத்தாளர்கள், கலைஞர்கள், என பலரும் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு தடைப் பட்டிருந்தார்கள். தற்போது இந்த தடைகள் நீக்கப்பட்டு எல்லோராலும் சாதிக்க முடியும் என்ற காலத்தில் தற்போது நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் எமக்கு மிகப்பொரிய போட்டித்தன்மை மிக்க நிலைமையும்  வந்துள்ளது. சமூகத்திற்கு சிறந்த சேவைகளை மேற்கொள்ளக் கூடிய இளைஞர்கள் நாங்கள் உருவாக்க வேண்டும்.

தற்போது மட்டக்களப்பு  மாவட்டத்தினுடைய பாதிப்புக்கள் பல பின்நடைவுகளைச் சந்தித்து வருகின்றது. இன்னமும் எமது மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் கிடக்கின்றது என்ற பெயரைத் தாங்கியவாறு நாங்கள் வாழ்கின்றோம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் தற்போது வளர்ந்து வரும் இளைஞர்களைக் கட்டியெழுப்புவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

மிகவும் சக்திமிக்க மண்வளம், மனிதவளம் கொண்ட எமது இந்த மட்டு மாவட்ட இன்னமும் பிறரிடத்தில் தங்கியிருக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது. இதனை மாற்ற வேண்டுமாக இருந்தால் சமூகம் விழிப்படைய வேண்டும். சமூகம் விழிப்படைய வேண்டுமாக இருந்தல் கல்வியில் நம்மவகர்கள் முன்னேற வேண்டும்.

இன்று சர்வதேச ரீதியான முறையில் நோக்குகின்றபோது மிகப்பெரிய பிளைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது ஐக்கிய நாடுகள் சபையிலே பேசப்படுகின்றது இலங்கையிலே 13 வது திருத்தத்தினை அமுல்ப் படுத்துங்கள் என்று. ஆனால் அது வட மாகாணத்தல் மாத்திரம் அமுல்ப்படுத்துங்கள் என்று கூறப்படவில்லை. கிழக்கப் பற்றிக் கதைக்கின்றார்களில்லை. இதனை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.

தனி நாடு கேட்வர்கள், சமஸ்ட்டி கேட்டவர்கள் தந்தை செல்வாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று சென்னவர்கள் தற்போது அவர்களே கேட்கின்றனர் மாகாணபை முறைமையினை. மாகாணசபை முறைமையினை அமுல்ப் படுத்தயிந்தால் தற்போது எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். பரவாயல்லை இன்றாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் அதையாவது அவர்கள் வெளிப்படையாகச் சொன்னாலும் பரவாயில்லை இன்னமும் மழுங்கடித்து ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அந்த அடிப்படையில் கிழக்கு மாகாண மக்கள் மீண்டும் அரசியல் ரீதியாக தோல்வி கட்டிருக்கின்றோம் வடமாகாண மக்கள் அதில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். இவைகளை பார்க்கின்றபோது நாங்கள் தோல்வி கண்டாலும் அரசியர் ரீதியாக பயணிக்க வேண்டிய பொறும்பம் வந்திருக்கின்றது.

ஏனெனில் இந்த மண்ணிலே, இந்த மாகாணத்திலே பிறந்து விட்டோம் போட்டி மிக்க சமூகத்திலே நாங்கள் வாழ்ந்து கொண்டிக்கின்றோம். இவற்றினை வைத்துக் கொண்டு எங்களுடைய சமூகத்தினை வளர்க்க வேண்டும்.  இதனை எமது சமூப்பொறுப்பாக நாங்கள் அனைவரும் கருத வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தற்போதிருக்கின்ற முதலமைச்சரிடம் ஒரு விடையத்தினை தெரிவித்து விட்டு அவ்விடையம் பற்றி மீண்டும் 3 மதங்களின் பின்னர் கேட்டால் ஐயோ மறந்து விட்டேன் எனக் கூறுகின்றார். அதற்கு என்ன செய்வது அது எமது மாகாணத்தின் துர்ப்பாக்கிய நிலை என்றுதான் சொல்ல வேண்டும்.

படைப்பாளிகள் அனைவரும் எதிர் காலத்தில சமூக மாற்றத்தினை உண்டு பண்ணக் கூடிய விடையங்களைப் படைக்க வேண்டும். அது தலையாக கடமையாகவும் இருக்க வேண்டும் அவைகளனைத்திற்கும் எமது சகல ஒத்தாசைகளும் வழங்கப்படும் என அர் தெரித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: