3 Mar 2014

உபதபாலகமும் பட்டறைக்கடையும் உடைப்பு

SHARE
(சக்தி)

மட்டக்களப்பு மாட்டத்தின் களுவாஞ்சகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் உபதாபாலகம் நோற்று இரவு (01) இனந்தொரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு 900 ரூபாய் பணம் கொள்ளையிடப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை அரைநாள் வேலைமுடிந்து நண்பகலுடன் தபாலகத்தினை பூட்டிவிட்டுச் சென்றதாக ஒந்தாச்சிமடம் உபதாபாலத்தின் தபாலத்திபர் தெரிவித்தார்.

இத்தபதாலகத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு இத்தபாதகத்தின் முன்கதவினை உடைத்துக் கொண்டு உள்நுளைந்து அங்கு பெட்டகத்தினுள் வைக்கபட்டருந்த 900 ரூபா பணத்தினை மாத்திரம் பெட்டகத்தினை உடைத்து கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அப+பக்கர் தெரிவித்தார்.

நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட ஓந்தாச்சிமடம் உப தபாலகத்துடன் கிழக்கு மாகாணத்தில் 8 தபாலகங்கள் உடைக்கபட்டுள்ளதாகவும் அவற்றுள் 3 உபதபாலகங்களும், 5 தபாலகங்களும் அடங்குவதாக தபால் திணைக்களத்தின் கிழக்கு மாகாண நுண்ஆய்வு பரிசோதகர் எம்.சற்.எம்.பாறுக் தெரிவித்தார்.

கிழக்கில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருவதானது மிகுந்த வேதனையளிப்பதாகவும் இது ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் ஈனச் செயல்கள் எனவும் இவ்வாறானவர்களை கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கிழக்கு மாகாண  பிரதி தபால்மா அதிபர் திருமதி வாசுகி-அருள்ராசாவிடம் கேட்போது

கடந்த காலங்களில் ஏற்பட்ட தபால் காரியாலயங்கள் உடைப்புச் சம்பவங்கள் தொர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும் அதங்கிணங்க அனைத்து தபாலகங்களில் திறப்புக்களை காரியாலய முடிவின்போது அருகிலுள்ள பொலிஸ் நிலைகத்தில் ஒப்படைக்கும்படி தபாலத்திபர்களை அறிவறுத்தியுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் தமக்க மிகுந்த மன வேதனையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு ஒந்தாச்சிமடம் உபதபாலகத்தின் அருகில் அமைந்துள்ள தங்க நகைத் தொழில் புரியும் பட்டறைக் கடை மூன்றினையும் இனந்தெரியாத நபர்கள் உடைத்துள்ளதாகவும்,  இவ்வாறு உடைக்கப்பட்ட கடையினுள் எதுவித பொருட்களும் களவாடப்டவில்லை எனவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஓந்தச்சிமடத்தினைச் சேர்ந்த  சுலக்கஸன்,ஆனந்தராஜா, நிவேதன் ஆகியோரின் தங்க நகைத் தொழில் புரியும் பட்டறைக் கடைகளெ இவ்வாறு உடைக்கப் பட்டுள்ளது. 

இச்சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அப+பக்கர் மேலும் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: