1 Mar 2014

யானைகளின் தாக்குதல் தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம்

SHARE
(தீபன்)


காட்டு யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் கூட்டமானது கோறளைப் பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் மேற்படி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (28.02.2014) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் அமைச்சின் அதிகார சபையின் இணைப்புச் செயலாளர், பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வாகரை பிரதேச கால்நடை வைத்தியர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் கிராமசேவை உத்தியோகஸ்தர்கள் கிராம மட்ட அமைப்புக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் hட்டு யானைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல தீர்வுத் திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டதுடன், காட்டு யானைகளின் தாக்குதல் அதிகம் இடம்பெறும் பகுதிகளுக்கு மின்சார வேலிகளை அமைப்பதற்கான நிதியொதுக்கீடு வனஜீவராசிகள் அமைச்சினூடாக மேற்கொண்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் இதன்போது தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: