மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த 20 வருடகாலமாக சான்றிதழ் தரம் கொண்ட கற்கை நெறிகள் நடாத்தப்பட்டு வந்தது. தற்போது வரலாற்றில் முதல் தடவையாக டிப்ளோமா தரம் கொண்ட (Nஏஞ – 5) கற்கை நெறிக்கான அனுமதி இக் கல்லூரிக்கு கிடைத்துள்ளது. இதனை முன்னிட்டு இக் கற்கை நெறிக்கான ஆரம்ப விழா எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு தொழில்நுட்பக் கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பாலசுப்ரமணியம், மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ்.டி.ஆர்.பெரேரா, கிழக்கு பல்கலைக் கழக சுவாமி விபுலாந்தர் அழகியல் கல்வி நிறுவக பணிப்பாளர் கலாநிதி.பிறேம்குமார், காடி தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் ஜனாப்.ஏ.எல்.பதுறுதீன் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்ல}ரி அதிபர் ரி.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இதன் போது மேலும் சில டிப்ளோமா கற்கை நெறிகள் அரம்பிப்பதற்கான கோரிக்கைகளை மாணவர்கள் விடுக்கவுள்ளதாகவும் கல்ல}ரி அதிபர் ரி.ரவிச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment