21 Mar 2014

“புண்ணிய கிரம செயலமர்வு”

SHARE
 (சக்தி)

நற்பண்புகள் நிறைந்த ஒழுக்கங்களைப் போற்றும் சமதாயம் ஒன்றை உருவாக்கும் நோக்குடன் இந்து சமய கலாசார அலுல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் காக்காச்சுவட்டை விஷ்னு அறநெறி பாடசாலையும் இணைந்து “புண்ணிய கிரம செயலமர்வு”  ஒன்று மட்.காக்காச்சிவட்டை விஷ்னு வித்தியாலயத்தில் நடைபெற்றது.

போரதீவுப் பற்று பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகஸ்தர் இ.உமாபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து சமய கலாசார அலுல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் (அறநெறி) திருமதி.கேமலோஜினி-குமரன், மட்டக்களப்பு மாவட்ட இந்து காலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி.எழில்வாணி-பத்மகுமார், விவசாய விரிவாக்கல் உத்தியோகஸ்தர் சிறிபவன், மற்றும் போரதீவுப் பற்று உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.குணரெத்தினம், மற்றும், கலாசார அபிவிருத்தி உத்தயோகஸ்தர்கள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் காக்காச்சவட்டை விஷ்னு ஆலயத்தில் விசேட ப+சை நடைபெற்று  பின்னர் பசுவுக்கு கோமதா பூசையும் நiபெற்றது. நந்திக்கொடி ஏற்றல், அறநெறிக் கீதம், மற்றும் மரம் நடுகை நிகழ்ம் இடம்பெற்று சமயற் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் விசேட ஆன்மீக சொற்பொழிவினை தொண்டமான் கலையியற் கல்லூரியின் விரிவுரையாளர் யுவஸ்ரீ கலாபாரதி வி.பிரமீன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்த்தினார்.

இதன்போது அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


SHARE

Author: verified_user

0 Comments: