16 Feb 2014

பெரியகல்லாறு தபாற் கந்தோரில் சுமார் 270000 ரூபா நிதி மோசடி

SHARE
 (சக்தி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு தபாற்கந்தோரில் அரச உதவிப் பணம் பெற வந்தோர் கடந்த வியாழக்கிமை கடந்த 13 அன்று தமக்கு வழங்கப்படும் பணம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரியகல்லாறு தபாற்கந்தோரினால் நேற்றயதினம் மக்களின் மாதாந்த அரச உதவிப் பணம் பெறுவதற்கு அழைக்கப் பட்டிருந்தனர்.

அரச உதவிப் பணம் பெற வந்தோருக்கு நேற்றயதினம் பிற்பகல் அல்லது எதிர் வரும் சனிக்கழமை உங்களுடைய பணத்தினை நீங்கள் வழமை போன்று இங்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என பெரியகல்லாறு தபாற்கந்தோர் நிரவாகத்தினரால் மக்களுக்கு நேற்று காலையில் அறிவுறுத்தப் பட்;டனர்

இவ்வாறு மக்களை ஏமாற்றுவது முறையில்லை என கிராம உத்தியோகஸ்த்தர் பொரயகல்லாறு ரி.குலோத்துங்கள் தபாலகத்திற்கு நேரடியாகச் சென்று தனது அதிருப்பியினை தெரிவத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தபால் கந்தோர் அதிகாரிகளுடன் கேட்டபோது இத்தபாலகத்திற்குரிய தபாலதிபர் பொறுப்புக்களை உரியமுறையில் ஒப்படைக்காமல் எதுவித அறிவித்தலுமின்றி திடீரென அவர் எங்கேயோ சென்று விட்டார். இதனால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தபால் அத்தியட்சகர் பெரியகல்லாறு தபாலகத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

இவரின் ஆரம்பக்கட்ட விசரணைகளின்போது குறித்த தபாலகத்தில் வைக்கப் பட்டிருந்த காசு குறைவடைந்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னரே சரியான தொகை தெரியவரும் எனவும் , தெரிவித்த அவர் பொதுமக்களின் அரச உதவிப் பணம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பெரியகல்லாறு தபாற் கந்தோரில் சுமார் 270000 ரூபா நிதி மோசடி ஏற்பட்டுள்ளதாகவும்  இச்சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் முடுக்கிவிடப் பட்டுள்ளதாகவும் சந்தேக நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரீ.அபூபக்கர் தெவிரித்தார்.

முட்டு:பெரியகல்லாறு தபாற் கந்தோரில் ஏற்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பில் அதே தபாற் கந்தோரில் கடமை புரியும் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது சந்தேகம் நிலவுவதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரீ.அபூபக்கர் தெவிரித்தார்.

மேற்படி சந்தேக நபரைக் கைது செய்யச் சென்றபோது அவர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவரைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: