(வராதன்)
ஜக்கியத்துக்கும் சகவாழ்வுக்குமான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்தகால வரலாற்றில் கண்டிராத புகைப்பட காட்சிப் பதிவுகள் மட்டக்களப்பு-தேவநாயகம் மண்டபத்தில் இன்று (20) இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷிர் சேகுதாவூத் கலந்து கொண்டு கண்காட்சியினை பார்வையிட்டார்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வே.தவராஜா மற்றும் மதத் தலைவர்கள் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் உட்பட பலர் இந்நகழ்வில் கலந்து கொண்டு கண்காட்சியினைப் பார்வையிட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த பல வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் சாட்சிகள் பதிவுகளாக புகைப்படங்கள் வாயலாக காட்சிப் இங்கு படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment