20 Feb 2014

புல்லுமலைக் கிராமத்தின் பிள்ளையார் கதை

SHARE
 (வராதன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் புல்லுமலை எல்லைக் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவந்த தமிழ் மக்கள் தங்களது சொந்தக் கிராமத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை இழந்து தவிப்பதுடன் இக்கிராமத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள பிள்யையாரும் தனது தும்பிக்கையை இழந்து தவிக்கின்றார் என்பதை அண்மையில் அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளின் அடையாளங்கள் பல அபிவிருத்திஇ புனரமைப்பு திட்டங்களின் ஊடாக மாற்றியமைக்கப்பட்டுள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எல்லைக் கிராமமான புல்லுமலை கிராமத்தில் அனாதரவாக விடப்பட்டுள்ள பாழடைந்த பிள்ளையார் ஆலயமும் அங்கு கைஇகால்கள் உடைந்த நிலையில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரும் மட்டக்களப்பில் நடைபெற்ற யுத்த அழிவுகளை ஞாபகமூட்டும் சாட்சியாகவே காட்சியளிக்கின்றது.
மட்டக்களப்பு செங்கலடி நகருக்கு தெற்கே சுமார் 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பெரியபுல்லுமலை கிராமம் இன்றும் 30 ஆண்டுகால யுத்த வடுக்களின் எச்சங்களை சுமந்தபடியே காட்சியளிக்கின்றது.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள் ஆனால் இங்கு குடியிருப்புக்களே இல்லாமல் ஒரு கோயில் உடைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் பாழடைந்து கிடக்கின்றது என்றால் இந்த அவலத்திற்கு பொறுப்பானவர்கள் யார்?

ஒரு இனத்தின் நம்பிக்கையில் உயிர் நாடியாக திகழும் ஆலயம் சிதைந்துபோகுமாக இருந்தால் அந்த சமூகம் வாழுகின்ற இடங்களும் சிதைந்துபோகும் என்பதற்கு புல்லுமலை விநாயகர் ஆலயத்தின் இன்றைய தோற்றம் சாட்சியாகவுள்ளதுடன் பலருடைய மனசாட்சிகளை அசைக்கின்ற அடையாளமாகவும் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்திற்கு பின்னரான ஆலயங்களின் புனரமைப்பு பணிகள் மிகத் துரிதமாக நடைபெற்றுகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மட்டக்களப்பில் தமிழ் மக்களின் அபிவிருத்திற்கு சவால் விடும் வகையில் மட்டக்களப்பு பெரியபுல்லுமலை கிராமமும் அங்குள்ள சித்தி விநாயகர் ஆலயமும் இவ்வாறு காட்சியளிக்கின்றமையானது மட்டக்களப்பின் இந்து அமைப்புக்களும்இ அதிகாரிகளும்இ அரசியல்வாதிகளும் வெட்கித் தலைகுனிய வேண்டிய வேதனையான விடயமாகவுள்ளது.

ஒரு இனத்தின் உயிர் நாடியாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் தன்நம்பிக்கையாகவும் விளங்கும் வழிபாட்டுத்தலமான பிள்ளையார் ஆலயத்தை புனரமைக்கமுடியாத ஒரு கையாளாகாத தமிழ் சமூகமாக தமிழர்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதே மட்டக்களப்பில் உள்ள தமிழ் சமூகத்திற்கான அபிவிருத்தியின் யதார்த்தமான குறியீடாகவுள்ளது.

யுத்தத்தின் பாதிப்புக்களையும்இ அவலங்களையும் மிகக்கூடுதலாக அனுபவித்த இனம் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திகளை அளவீடு செய்வோமாக இருந்தால் தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியென்பது உண்மையில் இந்த புல்லுமலை விநாயகர் ஆலயத்தைப் போன்றே உள்ளது என்பதை இங்குள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

உண்மையில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த கடவுள் என்றபடியால்தான் இந்தப் பிள்ளையார் இந்த இடத்தில் இத்தனை ஆண்டுகளாக அனாதையாக கிடக்கின்றார் என்ற கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதே கடவுள் எமது சகோதர இனத்தில் இருந்திருந்தால் இன்நேரம் இந்த இடம் எவ்வாறு காட்சியளித்திருக்கும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை.

கடவுளுக்கே இந்த நிலை என்றால் இங்குள்ள மக்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை உண்மையில் இவ் விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச் சந்தை மிகப்பெரிய பொருளாதார செலவில் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டிருந்தாலும் புல்லுமலை மக்களின் நம்பிக்கையாக இருந்த மேற்படி தும்பிக்கையாரின் ஆலயத்தை புனரமைத்து கொடுத்தால் இவ் ஆலயத்தை அடிப்படையாக கொண்டு மீண்டும் தமிழ் சமூகத்தின் ஒன்று கூடல் இந்த மண்ணில் முளைவிடும் என்பதுடன் புல்லுமலை கிராமத்தின் வளர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டதாக அமையும் என்கின்றனர் புல்லுமலை தமிழ் மக்கள். 






SHARE

Author: verified_user

0 Comments: