24 Feb 2014

எனக்கு தொடர்ந்து அரசியலில் இருக்கும் எண்ணம் கிடையாது

SHARE
(சக்தி)

எனக்கு தொடர்ந்து அரசியலில் இருக்கும் எண்ணம் கிடையாது எமது மட்டகளப்பு மாவட்டத்தினை குறுகிய காலத்தினுள் பல அபிவிருத்திகளை செய்து விட்டு நான் அரசியலிலிருந்து விலகுவதற்குள்ளேன். அதற்கிடையில் என்னை நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்துங்கள். நான் உங்களோடிருந்து எமது பிரதேசத்தினையும் மாவட்டத்தினையும் கட்டியெழுப்பவதற்கு தயாராக உள்ளேன்.

மீழ்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (23) களுவாஞ்சிகுடி இளைஞர் முன்நேற்றக் கழகத்தின் 32 வது வருடாந்த விளையாட்டு விழா நடைபெற்றது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேதான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்த கருத்து தெரிவிக்குகையில்

உலகத்திலே பொதுவானவைகளாக விளையாடடு, மற்றும் இசைத்துறை ஆகி இரண்டும்தான் காணப்படுகின்றன. இவ்வாறான விளையாட்டின் நோக்கம் என்னவென்றால் சமூகத்தினை ஒன்றுமைப் படுத்துவதும் இளைஞர் யுவதிகளின் ஆழுமை மற்றும் திறமைகளை வளர்ப்பதுவும் ஆகும். 

இவ்வாறான செயற்பாடுகள், கிராமம், பிரதேசம், மாவட்டம் நாடு தழுவிய ரீதியிலும் நடைபெற்று வருகின்றன். 5 கண்டங்களை இணைப்பதற்காக ஒலிம்பிக் கொடியில் 5 வர்ணங்களைக் கொண்ட வளையங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப் பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் விளையாட்டு கி.பி 776 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

அப்போதைய காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டுக்கள் தற்போது உலகத்தில் நவீன மயப்டுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாகத்தான் தேசியமட்டம், மாகாணமட்டம், மாவட்ட மட்டம், பிராந்திய மட்டம், கிராம மட்டம் என பல்வேறுபட்ட பரிவுகளில் விளையாட்டுக்களை நடாத்தி வகின்றோம்.

இந்த விளையாட்டுக்களில் மரதன் ஓட்டம் மிகவும் பிரதான இடம் வகிக்கின்றது அதன் சரியான தூர அளவு 45 கிலோமீற்றரும் 195 மீற்றரும் ஆகும்.

அந்த வகையில் அந்த அந்த மக்களின் அடையாளங்களைப் பிரதிபலித்துத்தான் தற்போதைய நிலையில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
களுவாஞ்சிகுடியினைப் பொறுத்தவரையில் நிறைந்த சிறந்த கல்விமான்களைத் தந்த இடமாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் களுவாஞ்சிகுடியிலுள்ள கல்விமான்களுடன் இணைந்து நான் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல் வேறுபட்ட அபிவிருதிகள் பற்றி கலந்தாலோசித்து வருகின்றேன். 

அதற்காக வேண்டித்தான் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே தனித் தமிழ் தொகுதியாகக் காணப்படுகின்ற பட்டிருப்பு தொகுதியினை அபிவிருத்தி செய்ய வேண்டும் என பாடுபட்டு வருகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தினைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்த பட்டிருப்பு தொகுதி மக்களிடத்திலேயேதான் உள்ளது. இதனை இப்பகுதி மக்கள் யாரும் மறந்திடக் கூடாது. அதற்காகத்தான் இந்த தொகுதியிலே நான் அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்தும் பாரிய அபிவிருத்தி வேலைத் திடங்கைள முன்னெடுத்து வருகின்றேன்.  

மட்டக்களப்பு மாவட்டத்திலே அமைந்துள்ள பட்டிருப்பு தொகுதியினை எனது தலைமையிலும் மட்டக்களப்பு தொகுதியினை அமைச்சர் ஹிஸ்புல்லாவின் தலைமையிலும் கல்குடா தொகுதியினை மற்றும் பஸீர் சேகுதாவுதின் தலைமையிலும் அபிவிருத்தி செய்து வருகின்றோம். 

அந்த வகையில் தான் தமிழ் மக்களின் ஒன்றுமை பலம் இருந்தால் எதிர் காலத்தில் பாரிய அபிவிருத்திகளை முன்நெடுத்துச் செல்லலாம். என நான் உங்களுக்குக் கூறிக் கொள்கின்றேன்.

இந்த களுவாஞ்சிகுடி இளைஞர் மன்னேற்ற விளையாட்டுக் கழகத்தின் அபிவிருத்திக்கு உடனடியாக ஒரு லெட்டசம் ரூபா ஒதுக்கீடு செய்கின்றேன். அதுபோல் இந்த விளையாட்டுக் கழகத்திற்கு ஒரு மேடை அமைத்தும் தருவதங்கு முயற்சி எடுப்பேன் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்ட அபவிருத்திக்கென மேலதிகமாக 168 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப் பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பிரதேசம் தற்போது பிரதேச சபையாக இருந்து வருகின்றது இதனை நகர சபையாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் காரணமாகததான் களுவாஞ்சிகுடி நகரை அழகு படுத்துவதற்கு 20 லெட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. 

இதுபோன்று பலவேறுபட்ட அபிவிருத்தகளை மென்மேலும் மேற்கொள்வதற்கு தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சிறந்த முறையில் செயற்பட வேண்டும்.

எனக்கு தொடர்ந்து அரசியலில் இருக்கும் எண்ணம் கிடையாது எமது மட்டகளப்பு மாவட்டத்தினை குறுகிய காலத்தினுள் பல அபிவிருத்திகளை செய்து விட்டு நான் விலகுவதற்குள்ளேன். அதற்கிடையில் என்னை நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்துங்கள். நான் உங்களோடிருந்து எமது பிரதேசத்தினையும் மாவட்டத்தினையும் கட்டியெழுப்பவதற்கு தயாராக உள்ளேன்.

தற்போது 380 மில்லியன் ரூபாய் உள்ளது மாவட்டத்தின் பல அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு வெள்ளஅனர்த்த பாதுகாப்புக்காக 1100 மில்லியன் ரூபாய் உள்ளது. கிராமத்திற்கு ஒரு வேலைத்திடத்திற்கென 1068 மில்லியன் ரூபா உள்ளது. மேலும் பாடசாலை, வீதிகள் போன்ற புணரமைப்பக்கென 1668 மில்லியன் ரூபாய் நிதி உள்ளது இவற்றுள் 178 மில்லியன் ரூபாய் நிதி பொருளாதார அமைச்சிலிருந்து வருகின்றது.
இவ்வாறு நிதிகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொணர்ந்து கல்வி. சுகாதாரம், விளையாட்டு, குடிநீர் விவசாயம், மற்றும் ஏனைய வாழ்வாதார செயற்பாடுகளுக்கும் செலவு செய்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இதனால் எமது மாவட்டம் ப+ரணத்துவம் பெற்ற மாவட்டமாக விரைவில் மாற்றமடையும்.

இவற்றின் வெளிப்பாடாக மண்முனைத்துறைப் பாலம் எதிர் வரும் சித்திரை மாதம் 12 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப் பட்டவுள்ளது.
இவையனைத்திற்கும் மட்டக்ளப்பு மாட்டத்திலே தனித்தமிழ் தொகுதியாகக் காணப்படுகின்ற பட்டிருப்புத் தொகுதிவாழ் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எதிர் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் கட்சியில் குறைந்தது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை எமது மக்கள் அனுப்பினார்கள் என்றால் மேலும் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும். 

நான் ஓரு பிரத்தியமைச்சர் மாத்திரமல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவருமாக இருக்கின்றேன் ஆகையில் இவைகளை வைத்துக் கொண்டு அதிகளவான் அபிவிருத்தகளை மேற்கொள்ளமுடியும்.
கடந்த காலங்களில் இருந்து செயற்பட்ட இராஜன செல்வநாயகம், இராசமாணக்கம். தேவநாயகம் போன்ற தமிழ் அரசியல் அமைசர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், இருந்து இப்பகுதியில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்;கினார்கள். அவர்களுடைய காலங்களில் சிறந்த வளர்சியும் காணப்பட்டன. அவை இடைப்பட்ட காலங்கிளில் தடைப்பட்டுக் கிடந்தன தற்போது அந்த வளர்ச்சியினை மீண்டும் கொண்டு வருகின்றோம்.
இவைகளுக்கு அரசியல், மற்றும் அதிகாரங்களைக் கொண்டுதான் அபிவிருத்திகளை மேலாங்கிச் செல்லமுடியும். இலங்கையிலே சிறந்த எடுத்துக்காட்டாக அண்மையில் இம்மாவட்த்திலுள்ள பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனங்களை வழங்கி அனைவரும் நிர்தர உத்தியோகஸ்தர்களாக்கியுள்ளோம். இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டான விடயமாகும். இவவாறு பல நன்மைகளை காலப்போக்கில் கொண்டு வரலாம். இவற்றுக்கு எதிர் காலத்தில் அவற்றுக்குரிய சிறந்த நபர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.

ஆனால் இன்னும் எதிர்க்கட்சயிலிருந்து கொண்டு அறிக்கை அரசியலை நடாத்த முடியாது தொடர்ந்தும் மக்களை எமாற்றிக் கொண்டு இருக்க முடியாது தற்போது மாற்றத்தினைக் கொண்டு வரவேண்டும்.
அண்மையில் சம்மந்தன் ஐயா கிண்ணியாவில் வைத்து ஓர் கருத்தினை வெளியிட்டிருந்தர் அரசிடம் பிச்சை எடுத்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டிய தேவை எமக்கில்லை எனத் தெரிவத்திருந்தார்.

அவரின் கருத்திலிருந்து பார்க்கும்போது தமிழன் சாப்பிடவும் கூடாது. வளர்ச்சியடையவும் கூடாது என நினை;ககின்றார் என எண்ணத் தோணுகின்றது.
இதனை விடுத்து அபிவிருத்தி மற்றும் உரிமை ஆகிய இரண்டியையும் நாங்கள் ஒன்றாக நோக்குவேம். அரசின் பக்கமிருந்துதான் இவை இரண்டினையும் பெற முடியும், இதனை விடுத்து எதிர் கட்சியிலிருந்து கத்துவதனால் எதனையும் பெறமுடியாது. இதங்கு ஒரு சிறந்த உதாரணம்தான் 13 வது திருத்தச சட்டம் தேவை என்பதனை பாராளுமன்றத்தில் நான் கதைத்து வருகின்றேன். இதனை வேறு யாரும் கதைக்கமாட்டமார்கள்

தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே சிறந்த அதிகாரிகள் இரவு பகல் பாராது மக்களுக்காக சேவை செய்து வருகின்றார்கள் அவர்களை அனைவரையும் நான் பாராட்டுகின்றேன்.

மட்டக்களப்பு மக்கள் எங்கு வியாப்பித்தருந்தாலும் அவர்கள் தற்போது சிறந்த முறையில் முன்னேறிக்கொண்டு வருகின்றார்கள். களுவாஞ்சிகுடியினைச் சேர்ந்த வைத்தியர் சுகுணன் அவர்களின் மகள் கொழும்பிலே இருக்கன்ற றோயல் கலலாரியில் சென்றவருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலiமைப்பசில் பரீட்சையில் முதலாம் இடத்தனைப் பெற்றிருக்கின்றார் இது பாராட்டத்தக்க விடயம் ஏனெனில் இதுவரைகாலமும் வடமாகாண பிள்ளைகள் தான் முதலிடத்தில் வருவார்கள் ஆனால் இம்முறை மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

இதுபோல் மட்டக்களப்பின் கல்வி வளர்ச்சி தற்போது நன்றாக இருக்கின்றது. இந்த வளர்ச்சி மிகக் குறுகிய காலத்தினுள் பாரியதொரு அடைவு மட்டத்தினை எட்டிவிடம் அதற்காக வேண்டி மட்டக்களப்பு மாட்டத்தலே விஞ்ஞான தொழில் நுட்ப பாடசாலைகளாக 6 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அபிவருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றினைச் செய்யாமல் விட்டால் எதிர காலத்தில் தமிழ்ர்களின் கல்வி நிலை எவ்வாறு அமையும் என்பதனை சற்று சிந்திக்க வேண்டும். கடந்த காலங்களில் அதிகாரிகள் மட்டத்தில் அதிகம் இருந்தவர்கள் தமிழர்கள்தான் ஆனால் தற்போது யாருமற்ற நிலைதான் காணப்படுகின்றது இதற்குக் காணரம் இங்கு நடைபெற்ற யுத்தம்தான். 30 வருட கால இடை வெளியில் அதிகாரிகள் வளர்க்கப்படவில்லை. 
எனத் தெரிவித்த அவர்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது இருக்கின்ற தமிழ் வைத்திய பணிப்பாளர் சென்றால் வேறு ஒரு இனத்தவர்தான் வருவார், கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் பதவியும் அவ்வாறுதான் இதனை நான் கூடாது என்று கூறவிலலை ஆனால் தமிழர்களின் கல்வி நிலை இவ்வாறுதான் சென்று கொண்டிருக்கின்றது. இந்த இடைவெளியினை தமிழ் மக்கள் பூர்த்தி செய்ய கல்வியில சிறந்து விளங்கவேண்டும் . எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

SHARE

Author: verified_user

0 Comments: