24 Feb 2014

களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டுக் கழகத்தின் 32 வருடாந்த விளையாட்டு விழா

SHARE
 (சக்தி)

களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டுக் கழகத்தின் 32 வருடாந்த விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்வான மரதன் ஓட்ட நிகழ்வு நேற்று (23) இடம் பெற்றது வர்தக சங்க தலைவர் திருவிளங்கம் அவர்கின் அனுசரணையோடு நடைபெறும் இந் நிகழ்வில் அதிகழவான ஓட்ட வீரர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் நேற்றயதினம் பி.ப 2.30 மணியளவில் களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் கழகத்தலைவர் பா. ராதேஸ் அவர்களின் தலைமையில் ஏனைய விளையாட்டு விழாக்கள் ஆரம்பமானது.

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களும்இ விசேட அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம்இ வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன் அவர்களும்இ கலந்து கொண்டதுடன்இ சிறப்பு அதிதியாக கிராமத் தலைவர் அ. கந்தவேள் மற்றும் களுவாஞ்சிகுடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரீ. அபுபக்கர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 

இவ்விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டம்இ முட்டி உடைத்தல்இ சறுக்குமரம் ஏறுதல்இ வினோத உடைஇ கயிறு இழுத்தல்இ தலையணைச் சமர் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.








SHARE

Author: verified_user

0 Comments: