18 Jan 2014

அனைவரும் ஒன்றிணைந்து எமது மாணவர்களின் கல்விக்கு உந்து சக்தியளிக்க முன்வர வேண்டும். கி.மா.உ பிரசன்னா

SHARE
கடந்த காலங்களில் தமிழர்கள் அனைத்து துறைசார் திணைக்களங்களிலும் 63 வீதமானவர்கள் உயர் நிருவாக பதவிகளிலும்; இருந்தார்கள். ஆனல் அந்த நிலமை பேரினவாத சக்திகளால் குறைக்கப்பட்டு தற்போது புறக்கணிக்கப் படுகின்றது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா-இந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆரையம்பதி மாவிலங்கு துறைக்கிராமத்தில் நேற்று (17) இடம் பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைர்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவிலங்கு துறை ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சா.காசிநாதன் அவர்களின் தலமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்குகையில்

கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடிய காலகட்டத்தினை பேரினவாத சக்திகளும், ஏனையவர்களும் , தங்களுக்கு சாதகமாக  பயன்படுத்தி, எமது இனத்தினை புறக்கணித்து அவர் அவர்சார் இனத்தினை சார்ந்தவர்களை முன்னுரிமை படுத்தியுள்ளனர். இந்நிலமையை மாற்றியமைக்க வேண்டும். எனவேதான் எமது மக்கள் இவற்றினை கருத்தில் கொண்டு தமது பிள்ளைகளின் கல்வியில் கரிசனை காட்ட வேண்டும். கல்வியில் உலகில் தலைநிமிர்ந்து நின்ற தமிழினம் இன்று தலைகுனியும் நிலைக்கு சென்றுள்ளது. தமிழன் எவ்வளவுதான் சிறப்பாக கற்று கொண்டாலும் உயர் பதவிக்குரிய தகுதி இருந்தும் அதனை திட்டமிட்டு புறக்கணித்து வருகின்றனர்.

இன்று தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை சம்பந்தமாக அரசாங்கம் ஒருவருக்கு ஒருவர் வேறுபட்ட கருத்தினை முன்வைத்து வருவதனை பார்க்கக் கூடியதாகவுள்ளது. இது சம்பந்தமான இறுதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என்பதும் கேள்விக் குறியாக இருக்கின்றது. எது நாட்டின் கல்வி நிலமை இவ்வாறு சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் எமது மாணவர்கள் இவற்றினைக் கண்டு சோர்வடையக் கூடாது பரீட்சைக்கு தயாராக வேண்டும். ஆசிரியர்களும் இதற்கு செவிசாய்க்க கூடாது.

அனைவரும் ஒன்றிணைந்து எமது மாணவர்களின் கல்விக்கு உந்து சக்தியளிக்க முன்வர வேண்டும். அது அரசியல்வாதியாகவும் இருக்கலாம், திணைக்களத் தலைவர்களாகவும் இருக்கலாம், பொது அமைப்புக்களாகவும் இருக்கலாம் பிரிவினையின்றி ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமே எமது மாவட்டத்தின் கல்வியை கடடியெழுப்ப முடியும். இதற்கான தார்மீக பொறுப்பு எமக்கு உண்டு எனத் தெரிவித்த அவர்.

அது மாத்திரமின்றி எமது பெண்களை ஆசைவார்த்தை காட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவர்கள் அனைத்து கிராமங்களுக்கும் ஊடுருவி கஷ்ரப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களிடம் சென்று சொற்ப சலுகைகளை வழங்கி வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். இவற்றிக்கு இடமளிக்க கூடாது. இதனால் பல பிள்ளைகள் பராமரிப்பின்றி பாடசாலையைவிட்டு இடைவிலகுவதற்கான பிரதானமான காரணமாகவுள்ளது. எனவே இவற்றிக்கும் இடமளிக்காது அவ்வாறான குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு பொது அமைப்புக்கள் உதவி வழங்குவதன் மூலம் அவற்றினை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: