18 Jan 2014

கல்வி கற்கவேண்டிய மாணவர்களின் நிலையினை குழப்பி பாடசாலைக்கு அனுப்பாது பெற்றோர்கள் யாராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

SHARE


வறுமை என்பது எல்லாவற்றிலும் செல்வாக்கு செலுத்தி பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை ஆனால் வறுமையைப் போக்குவதற்கு வளிதேட வேண்டுமே தவிர மாணவர்களின் கல்வி எதிர்காலத்தினை அழிக்க முற்படுவதனை என்றும் அனுமதிக்க முடியாது மட்.மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் ந.வாசுதேவன் தெரிவித்தார்.

கடந்த 16.01.2014 அன்று ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு சிவா வித்தியாலயத்தில் தரம் 01 தொடக்கம் 05ம் தர மாணவர்களுக்கான கல்வி அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்இ

தமத குடும்பத்தினை வழிநடத்த முடியாது உள்ளது வருமானம் இல்லை எனக் கூறிக்கொண்டு பாடசாலை செல்வ வேண்டிய 14 வயதிற்குட்பட்ட சிறார்களை பாடசாலைக்கு அனுப்பாது வீடுகளில் வைத்திருப்பாதோஇ வேலைகளுக்கு அனுப்புவதோ சட்டத்திற்கு முரணானது.

கல்வி கற்கவேண்டிய மாணவர்களின் நிலையினை குழப்பி பாடசாலைக்கு அனுப்பாது பெற்றோர்கள் யாராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போட்டிமிக்க உலகம் அனைத்தும் நவின மயப்படுத்தப்பட்டு கணணிமயப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் எழுத வாசிக்கத்தொரியாமல் இருப்பது வேதனைக்குரியது. கல்வி அதிகாரிகளும் அரசியல் தலைமைகளும் கல்வியை மேம்படுத்தப்படும் போது பெற்றோர்களும் தமது பிள்ளைகளில் அக்கறை செலுத்த வேண்டும்.

வறுமை என்பது எல்லாவற்றிலும் செல்வாக்கு செலுத்தி பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை ஆனால் வறுமையைப் போக்குவதற்கு வழிதேட வேண்டுமே தவிர மாணவர்களின் கல்வி எதிர்காலத்தினை அழிக்க முற்படுவதனை என்றும் அனுமதிக்க முடியாது.

வறுமை நிலையில் உள்ளவர்கள் முன்வாருங்கள் அரசாங்கத்தின் ஊடாக திவிநெகுமஇ சமுர்த்தி போன்ற திட்டங்கள் ஊடாக உதவிபுரிய நாம் தயாராக உள்ளோம். அதிகமான பொற்றோர்கள் வெளிநாடு செல்வதும் மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும். உலக வரலாற்றில் பலசாதனைகளைச் செய்தவர்களின் வரலாற்றுப் பக்கங்களைத் தடவிப் பார்த்தால் அவர்களில் சாதனைகளின் பின்னால் வறுமைஇ வேதனைகள் தடைக்கற்கள் என பல முட்பாதைகளே தென்படும்.

சாதிக்கத் துடிப்பனுக்கு களம் அமைத்து கொடுப்பது பெற்றோர்களின் குடும்ப நிருவாகத் திறனிலேயே தங்கியுள்ளது. உணவு கொடுப்பதும் அரவணைப்பதும் வேறுமனே அன்பு காட்டுபவர்களாக இருந்தால் மாத்திரம் போதமாது. மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழித் துணையாக உள்ள கல்வித் துறைக்கும் வித்திட்டவராக இருக்கவேண்டும்.

தொலைக்காட்சி நாடகங்கள்இசினிமா திரைப்படங்கள்இ பொற்றோரின் மதுபானப் பாவனைகஎள் சிறுவர்களின் கல்விக்கு பெரிதும் தடையாக அமைகின்றது இவற்றைத் தவிர்த்து கல்விகற்கக் கூடிய நல்ல குடும்பச் சூழலை வழக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஆரையம்பதி சிவா வித்தியாலயத்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்ற பெற்றோர்களுடனான கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுபாச்சக்கரவத்திஇ முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஆற்றல் பேரவைத் தலைவருமான பூ.பிரசாந்தன் கோட்டக்கல்விப் பணிப்பபாளர் கந்தசாமிஇ உதவிக் கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன்இ காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

SHARE

Author: verified_user

0 Comments: