26 Jan 2014

மொழிக்கு தமிழ் மக்கள் எதிரானவர்கள் அல்ல – (கி.மா.உ.ஜனா)

SHARE

(சக்தி)
பழைய மாணவர் சங்கம் ஒரு கிராமத்திற்கு  மிகவும் அவசியமான ஒன்றாகும் பிள்ளைகளுக்கு கல்வி எவ்வளவு அவசியமோ அதுபோல் பாடசாலைக்கும் கிராமத்தின் அபிவிருத்திக்கும் மிகவும் அவசியமான ஒன்றாக பழைய மாணவர் சங்கம் காணப்படுகின்றது. ஒரு கிராமத்தின் பழைய மாணர்கள் என்று சொல்லம்போது அரச உத்தியோகஸ்தர்களாகவோ அல்லது உயர் அதிகாரிகளாகவோ என் அரசியல்வாதிகளாகவோ மிளிர்கின்ற அவ்வேளையில் அது அந்த கிராமத்திற்குத்தான் பெருமை சேர்க்கின்றது. இவற்றினை வைத்துக்கொண்டு அந்தக்கிராமத்தின் பாரிய அபிவிருத்தியினை இட்டுச் செல்லலாம்.

என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கொவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்.மகிழூர் சரஸ்வதி வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டினால் மகிழூர் முல்லை முன்பள்ளி மண்டபத்தில் நேற்று (25) நடைபெற்ற  முதலாவது பரிசழிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்குகையில்

ஒரு கிராமத்திலே எத்தனை ஆலயங்கள் இருந்தலும். விளையாட்டுக் கழகங்கள் இருந்தலும், ஏனைய பல அமைப்புக்கள் இருந்தாலும் ஒரு பழைய மாணவர் சங்கம் இருக்குமானால் அந்தச் சங்கம் அனைவரையும் ஒன்றிணைத்து பல்வேறுபடட அபிவிருத்திகளை இட்டுச் செல்லலாம். மாணவர்களின் பகுதிநேர வகுப்புக்கள் தற்போது எங்கும் பரந்து கிடக்கின்றன. மாணவர்கள் காலை 5 மணிதொடக்கம் மாலை 5 மணி வரை பகுதிநேர வகுப்பிலே மாணவர்கள் களிக்கின்றனர். தற்காலத்தில் கல்விக்கு மிகவும் போட்டி வந்துள்ளது. எமது தமிழ் சமூகம் எதுவித தடைகளுமின்றி போட்டியின்றி ஒருகாலத்தில் கல்வியில் முன்னணியில் நின்றது. ஆனால் நாங்கள் பிற மத்தவருடன் பிற இனத்தவருடன் கல்வியில் முன்னணியில் வரக்கூடிய ஒரு சூழல் இருக்கின்றது. ஆனால் எமது சகோதர இன மக்களாகிய முஸ்லிம் மக்கள் அவரகளது பள்ளிவாயல்களுடாக அவர்களது மாணவர்களுக்கு மேலதிக கல்வியினைப் புகட்டிக் கொண்டிருக்கின்றார்கள். 

அதுபோல் எமது தமிழ் குழந்தைகளுக்கு எந்தளவுக்கு உதவி செய்து கல்வியினைப் புகட்ட வேண்டுமோ அந்த அளவிற்கு கல்வியினைப் புகட்ட வேண்டும். அந்த வகையில் மகிழூர் சரஸ்வதி வித்தியாலயத்தின பழைய மாணவர்களும் இங்குள்ள மாணவர்களுக்கு பகுதிநேர வகுப்புக்களை நடாத்தி வருகின்றமையினையிட்டு மிகுந்த சந்தோசமடைகின்றேன், அவர்களை நான் பாராட்டுகின்றேன்.

ஒருமனிதன் இந்த உலகத்தில பிறந்து நல்லவைகளைச் செய்ய வேண்டும். ஒரு மனிதன் பிறக்கும்போது நான் இந்த உலகத்தில் இவ்வளவு காலம் வாழ்வேன் என்று கடவுளிடம் குறிப்பெழுதிக் கொடுத்து விட்டுவரவில்லை. மாணவர்கள் நல்லவற்றினைக் கற்க வேண்டும், நல்ல செயல்களை மேற்கொள்ள வேண்டும். இலத்திரனியல் தொழில் நுட்பம் வளந்த இந்த உலகத்தில் கைத்தொலைபேசிகள் மலிந்து கிடக்கின்றன. அவற்றிலிருந்து நல்லவற்றினை மாத்திரம் பெற்று நல்லதொரு கல்விச் சமூகமாக மிளிரவேணடும். ஏன்பதனை நான் இவ்விடத்தில் கேட்டுக்கொள்கின்றேன். தொழில்முட்பம் என்பது நெருப்பினைப் போன்றது உணவினையும் சமைக்கலாம் வீட்டினையும் எரிக்கலாம் எனவே இந்த நவீன தொழில் துட்பத்தினை மாணவர்கள் சாதகமாத மாத்திரம் பயன்படுத்தி முன்னேற வேண்டும். 

தமிழ் சமூகம்  இன்றும் அனாதைகளாகவே இருக்கின்றோம்.

இன்றய நிலையில் எமது தமிழ் சமூதாயம் கற்றல் மூலம் பெறவேண்டியவை நிறையவே இருக்கின்றது. ஏனெனில் கடந்த 60ஆண்டுகாலமாக இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களாக அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 60 ஆண்டு காலமாக எமது உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கனிறோம். 30 வருடத்திற்கு மேலாக ஆயுதங்கள் மூலம் எமது உரிமைகளைப பெறப் போராடிய நாங்கள், இன்று அனாதைகளாக இருக்கின்றோம். பெறுமதியான சொத்துக்களை இழந்திருக்கின்றோம் விலை மதிக்கமுடியாத உயிர்களை இழந்திருக்கின்றோம். பாராம்பதியத்தினை மற்றும் கல்வி, இழந்திருக்கின்றோம் என் இன்றும் கூட எமது கலாசாரத்தினை இழது கொண்டிருக்கின்றோம்.  இவைகளை நாங்கள் மீழப் பெறவேண்டுமாக இருந்தால் எமது தமிழ மக்கள் கல்வியில் முன்னேற வேண்டும்.


தற்போது எமது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப் பட்டிருந்தாலும் இன்று நாங்கள் அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் ஒற்றுமையாகப் போராட வேண்டிய நேரம் இருந்து கொண்டிருக்கின்றது. எமது அரசியல் அபிலாசைகள் இன்றுவரை கிடைக்காத நிலையிலேலே இருந்து கொண்டிருக்கின்றோம். மட்டக்ளப்பிலே நேற்று முன்தினம் நடைபெற்ற உயர்மட்ட மாநாடு ஒன்றிலே யுத்தம் என்ற நடைந்தல் இங்கு உயிர் பலிகள் நடக்கத்தான் செய்யும் என கூறிச் சென்றுள்ளார் இந்த நாட்டின் உயர் அதிகாரி ஒருவர்.

ஆனால் இந்த நாட்டுக்குள்ளேயே ஒரு இனத்தின் மீது நடாத்தப்பட்ட போராட்டத்தினை கொத்துக் குண்டுகளையும், பீரேங்கி குண்டுகளையும் வீசி எம்மக்களை இந்த அரசு கொன்றளித்தது. இது எம்மினத்தின் மீது இவ்வாறு நடாத்தப்பட்ட இந்த தாக்குதல் திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை என்றுதான் நாங்கள் கூறுகின்றோம்.

போரினை முடிவுக்குக் கொண்டுவர சுமார் 22 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவின.

2009 ஆண்டு ஆயுதப்போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டு வர எத்தணித்தபோது இந்தியா, அமெரிக்கா, உட்பட சுமார் 22 நாடுகள் இந்த இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்துதான் இந்தப் போராட்டத்தினை முடிவுக்குக் கொண்ட வந்தார்கள். வெளிநாடுகளின் உதவியினைப் பெற்று எமது போராட்டத்தினை நசிக்கி விட்டு தற்போது அந்த நாடுகள் இலங்கை அரசின் மீது கேழ்வி கேட்கின்றன. அப்போது அந்த போராட்டத்திற்கு உதவிய நாடுகளுக்கு இந்த அசாங்கம் வழங்கிய உறுதி மொழிகள் இன்றும் அவை நிறைவேற்றப் படாமலிருக்கின்றன.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை அமுல்படுத்துவது , 13வது திருத்தச் சட்டத்தினை அமுல் படுத்துவது போன்ற பல உறுதி மொழிகளை இந்த அரசு வெளிநாடுகளுக்குக் கூறியது. ஆனால் அவை இன்றுரை நிறைவேற்றப் படாமல்தான் இருக்கின்றன. 

போராட்டம் நிறைவற்று 5 ஆண்டுகள் இருக்கின்ற தறுவாயிலும் இந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இந்த தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனையினைத் தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் என்ன வழிசெய்திருக்கினறது. கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை அமுல்ப் படுத்தும்படி வெளிநாட்டு அரசுகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலைக்கு ஒரு நீதியான விசாரணைகள் கேட்கின்றார்கள். 

பெற்றபிள்ளைகளை, கணவன்மாரை, உறவுகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்த எம்மக்கள் இன்றும் அழுது கொண்டிருக்கின்றார்கள், அரசிடம் சரணடைந்தவர்கள் எங்கே என்றுதான் மேற்குலகமும், இந்தியாவும் இந்த கேட்டு நிற்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான கண்காணிப்புக்கள்.

கடந்த ஜெனிவா மாநாடுகளில் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதனைவிட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரும் இங்கு வந்து சென்று நிலமையினை பார்வையிட்டுள்ளார். இவ்வருடம் எதிர்வருகின்ற மார்ச் மாதம் அதற்கு இந்த அரசு பொறுப்புக் கூறவேண்டும்  என நவநீதம்னிள்ளை கூறிச் சென்றுள்ளார். 
பிரித்தானிய பிரதமர் போர் நடைபெற்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டுச் சென்றுள்ளார், கனேடிய பிரதமர் தமிழ் மக்களை கொன்றளித்த இந்த நாட்டிற்கு வரமாட்டேன் எனக் கூறியுள்ளார்.

தமிழ் மக்களுக்குரிய தீர்வுகள் கிடைக்கவில்லையாயின், சரணடைந்த மக்களை விடுவிக்க வில்லையாயின், எதிர் வருகின்ற மார் மாதம் இந்த அரசு என்ன செய்யப் போகின்றது என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மொழி தமிழருக்கு எதிரியல்ல 

மொழி எமக்க எதிரியல்ல மொழி ஓர் ஊடகம்தான் ஆனால் அந்த மொழியை வைத்துத்தான் இன்று பற்றி எரிந்து கொண்டிருக்கும் இந்தப்பிரச்சனை உருவானது இந்த மொழியினால்தான் என்பதனை நாங்கள் உணரவேண்டும். இலங்கைக்குச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு இந்த நாட்டிலே ஆங்கிலமொழி மாத்திரமே புளக்கத்தில் இருந்தது. பின்பு தமிழ் தொழியும், சிங்கள மொழியும் அரச கரும மொழிகளாகக் காணப்பட்டுன.

1956 ஆம் அண்டு  இந்த நாட்டின் முதல் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டார நாயாக்கா அவர்கள் சிங்கள மொழி மாத்திரம்தான் அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தினார். அன்றிலிருந்து வெடித்த போராட்டங்கள் பல வழிகளில் மாறி உலுருவங்கள் எடுத்தன. னு;று நாங்கள் இந்த நிலையிலிருப்பத மொழி என்கின்ற வெறியினால்தான். ஆனால் மொழியினை கற்க வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. தற்போதைய காலகட்டத்தில் சகல மொழிகளிலும் பரீட்சையம் உள்ளவர்களாக நமயது மக்கள் மாறவேண்டும்.

ஓற்றையாட்சிய அமைந்துள்ள இந்த நாட்டில் நாம் எதனையும் சாதிக்க வேண்டுமாக இருந்தல் சிங்கள மொழி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். நான் மொழிக்கு நாங்கள் எதிரானவனல்ல. ஆனால் சிங்கள மொழியினை வைத்துக் கொண்டு பௌத்த மதகுருமார் இது சிங்கள தேசம் என கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகளாக மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருந்து செயபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த அரசு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றினை உருவாக்கி அதிலே வாயைத்திறந்தாலே இனத்துவேசம் கக்கும் விமல் விரசன்சவையும் , சம்பிக்க ரணவக்கைவையும் , எமது தமிழ் இனத்தினைச் சேர்ந்த பாதி அமைச்சர்களும் , முழு அமைச்சர்களும், அதிலே அங்கத்தவர்களாக்கியுள்ளது. இவர்கள் இருக்கம் அந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எவ்வாறு போய் அமருவது. 

இந்த நாட்டுக்கு மாகாணசபை அமர்வின கொடுக்கக் கூடாத என்று கூறுபவர்தான் இந்த விமல் வீரவன்ச, இந்த நாட்டில் சிறுபான்மை இனம் இல்லை இது ஒரு பௌத்த நாடு என்று கூறுபவர்தான் சம்பிக்க ரணவக்க

இந்துக் கோயில்கள் உடைப்பு

ஜனாதிபதி மாழிகைக்கு பின்னாலிருந்த 80 வருடகாலம் பழமைவாய்ந்த காளிகோயில் உடைக்கப் பட்டது, காலாகாலமாக இருந்த டம்புள்ளை காளிகோயில் காணாமல்போனது. இவ்வாறு தமிழ் மக்களின் வணக்கஸ் தலங்கள் அழித்துவரும் போது அரசுடன் இருக்கின்ற தமிழ் அமைச்சர்கள் தட்டிக்கேட்க முடியாதவர்கள், இருக்கும் இடத்தில் நாங்கள் எவ்வாறு அவர்களுடன் உட்கார்ந்த பேசுவது.

அரசுடன் ஒட்டியிருக்கும் தமிழ் அமைச்சர்கள் அபிவிருத்திதான் எமக்குத்தேவை எமது மக்களின் அபிலாசைகள் தேவையில்லை என்று கூறுகின்றார்கள்  அந்த அபிவிருத்திகள் தமிழ் மக்களின் தோள் மீது ஏறி நின்று வெள்ளையடிக்கம் நிகழ்வுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. இவைகளை விடுத்து எங்களை நாங்களே அபிவிருத்தி செய்யும் காலம் வரும் அது வரைக்கும் ஒன்றுமையுடன் செயற்படவேண்டும்.

இந்நிலையில் தமிழ் மக்களிடம் தற்போது கடைசியாக இருக்கும் ஆயுதம் வாக்குரிமை மட்டும்தான் நாங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர அணுகுமுறையின் மூலமே எமக்குரிய தீர்வு கிடைக்கும். எங்களை நாங்கள் ஆளக்கூடிய காணி பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய ஒரு சுயாட்சி கிடைக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் அனைவரும் ஓரணியில் நின்று வெளிய உலகிற்குக் காட்டவேண்டும். என அவர் தெரிவித்தார் 

SHARE

Author: verified_user

0 Comments: