25 Jan 2014

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் வார்த்தைகளுக்கு இனிமேலும் தமிழ் மக்கள் துணை போகக் கூடாது.

SHARE
(சக்தி)
கடந்த காலங்களில் நாய்குலைத்தால் பயம், கறுப்பு உருவம் எதனைக் கண்டாலும் பயந்து பயந்து, வாழ்ந்த எமது மக்கள் தற்போது அவைகளை மறந்து எந்த நேரமும் எங்கும் சென்று வரக் கூடிய சூழல் உருவாக்கப் பட்டுள்ளது. இதனை மக்கள் எந்தநாளும் அனுபவிக்க வேண்டுமாக இருந்தல் மக்கள் தமது பலத்தினைப் பிரயோகித்துக் காட்ட வேண்டும். ஆனால் தேர்தல் காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வந்து ஆய் , கூய் என்று கத்திவிடுவார்கள் அவர்களுக்கு எமது மக்கள் அள்ளி வாக்குகளைப் போட்டு விடுவார்கள் அவர்கள் வென்றதும் மக்களை மறந்து போய்விடுவார்கள் இந்த வரலாற்றுத்தவறினை இனிமேல் எம்மக்கள் விட்டு விடக் கூடாது. ஏன மீழ்குடியேற்றப் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி-முரளிதரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாக்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி அதிகார சபையும் இணைந்து நடாத்திய “மாட்ட திவி நெகும தைப் பொங்கல் விழா” நேற்று (24) வெள்ளிக்கிழமை காலை வெல்லாவெளி மாரியம்மன் ஆலயத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேதான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்குகையில்.

இலங்கை வரலாற்றிலே முதன் முறையாக ஒரு பிரதமர் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் விழாவை நடாத்தியது என்றால் நாங்கள் கடந்த 15 ஆம்திகதி மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் அலயத்தில் நடாத்திய பொங்கல் விழாதான். அதிலே இந்த நாட்டுக்கும் நாட்டிலுள்ள தலைவர்களுக்கும் ஆசிவேண்டியும் விசேட பூஜையினையும் நடாத்தியிருந்தோம். இது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு கிடைத்த ஒரு பாரியதொரு சந்தர்ப்பமாகும்.

தமிழ் மக்களாகிய நீங்கள் கடந்த காலங்கள்pல் ஏற்பட்ட அசாதாரண சூழல்களிலிருந்து விடுபட்டு இவ்வருடம் மிகவும் சிறப்பான முறையில் தைப்பொங்கலை தத்தமது வீடுகளில் கொண்டாடியிருந்தார்கள்.  
இன்றய நிலையில் யுத்தம் என்பதை நாங்கள் நிறுத்தி நாட்டில் நிரந்தர சமாதானம் நிலவுகின்ற இந்தக் காரணத்தினால்தான் இவை நிகழ்கின்றன என்பதனை மக்கள் தற்போது உணர்ந்துள்ளார்கள். மேலும் இது நிலைக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் யாவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
தமிழர்களின் பாரம்பரியத்தில் தைப்பொங்கல் விழாவும் பட்டிப் பொங்கல் விழாவும் நடைபெறுவது வழக்கம். தை பிறந்தால் வழிபிறக்கும் என்பதுபோல். தற்போது எமது மாவட்ட மக்களுக்கு நல்ல வழிபிறந்துள்ளது. அதுபோல் தமிழர்களின் கலை கலாசாரம், பாரம்பரியம் போன்றன மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் சிறப்பாகப் பேணப்படுகின்றன. என்பதில் பெருமிதம் அடைகின்றேன்.

கடந்த வருடம் 134 இந்து ஆலயங்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து ஒரு லெட்சம் ரூபா வீதம் 134 லெட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்து கொடுத்திருந்தேன்;. அதபோல் இவ்வருடமும்  100 ஆலயங்களுக்கு நிதி ஒதுக்கிடு செய்வதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது. ஆலயங்கள் ஊடாகத்தான் தமிழர்களின் பாரம்பரியங்கள் கலை, கலாசாரங்கள் பேணப்படுகின்றன. எனவே ஆலயங்கள் சிறந்த எடுத்துக்காட்டாக மிளிர வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பாகும்.

மட்டக்களப்புக்கு 1168 மில்லியன் ரூபா நிதி இவ்வருட அபிவிருத்திக்காக ஒதுக்கப் பட்டுள்ள அதேவேளை, வெள்ளப் பெருக்கினைத் தடுப்பதற்கு மேலும் 11000 மில்லியன் ரூபா நிதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. 4 வருடகாலமாக இப்பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவராக இருந்து செயற்பட்டு வருகின்றேன் இந்த 4 வருடத்திற்குள்ளும் பாரிய அபிவிருத்தி மாற்றங்களைக் மக்கள் கண்டிருப்பீர்கள். இது எந்த ஒரு அமைச்சர்களோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ செய்யாத வேலைத் திட்டங்களை நான் உங்களுக்கச் செய்து தந்த்திருக்கின்றேன். இவற்றுக்குகு மக்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்கள் இருக்கமாக இருந்தால் மென்மேலும் அபிவிருத்திகளை நாங்கள் இங்கு கொண்டுவரலாம்.

கடந்த காலங்களைவிட தற்போது குளங்கள் புணரமைக்கப் பட்டுள்ளன கல்வியில் பாரிய முன்நேற்றங்கள் காணப்படுகின்றன. வீதி அபிவிருத்திகள் நடைபெறுகின்றன, பாலங்கள் கட்டப்படுகின்றன, உதாரணமாக கொக்கட்டிச்சோலையிலிருந்து பொறியியல் துறைக்கு மாணவன் ஒருவன் தெரிவு செய்யப்பட்டுள்ளான். இந்த அளவிற்கு சகலவிதமான அபிவிருத்திக்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வித்திட்டுள்ளது.

இவ்வருடம் மகளிர் அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்து அவர்களது சங்கங்களையும் வளப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். படுவான்கரைப் பகுதியில் 95 வீதமான கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுள்ளது. மக்கள் அதனூடாக நன்மையடைந்து வருகின்றார்கள். இவைகளனைத்திற்கும் மக்களாகிய உங்களது பலத்தினைக் காட்டினால்தான் அரசாங்கத்திடமிருந்து மேலும் பல வளங்களைக் கொண்டு வரலாம்.

இரத்தக் காயங்களுக்கு இலக்காகி பல தழுப்புகளை நன் இன்று அவற்றினைச் சுமந்தவனாக இருந்து கொண்டு மக்களாகிய உங்களுக்கு அபிவிருத்திகளைச் செய்து வருகின்றேன். அதுபோல் தமிழ் மக்களாகிய நீங்களும் வீட்டுக்கு வீடு பல இழப்புக்களைச் சந்தித்தவர்கள். வீட்டுக்கு ஒரு பிள்ளை, இரண்டு பிள்ளை , என கடந்த காலத்தில் போராடிய எமது மக்கள் தற்போது அதிலிருந்து விடுபட்டுள்ளனர். 

கடந்த காலங்களில் நாய்குலைத்தால் பயம், கறுப்பு உருவம் எதனைக் கண்டாலும் பயந்து பயந்து, வாழ்ந்த எமது மக்கள் தற்போது அவைகளை மறந்து எந்த நேரமும் எங்கும் சென்று வரக் கூடிய சூழல் உருவாக்கப் பட்டுள்ளது. இதனை மக்கள் எந்தநாளும் அனுபவிக்க வேண்டுமாக இருந்தல் மக்கள் தமது பலத்தினைப் பிரயோகித்துக் காட்ட வேண்டும். ஆனால் தேர்தல் காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆய் , கூய் என்று கத்திவிடுவார்கள் அவர்களுக்கு எமது மக்கள் அள்ளி வேண்டைப் போட்டு விடுவார்கள் அவர்கள் வென்றதும் மக்களை மறந்து போய்விடுவார்கள் இந்த வரலாற்றுத்தவறினை இனிமேல் எம்மக்கள் விடக் கூடாது.

உங்களது அபிவிருத்திக்கு நிதிகளை அரசிடமிருந்து பெற்றுக் கொண்டு வருவது நான்தான் அபிவிருத்தித் திட்டத்தினை அமுலாக்குவது அசாங்கத்தின் அதிகாரிகள். நிதிகளைக் கொண்டு வருபவர்கள் அதிகாரிகள் அல்ல அவர்கள் திட்டத்தினை அமுல் படுத்துபவர்கள் மாத்திரம்தான்.
அதற்காக வேண்டித்தான் நீங்கள் எதிர் காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்கள் உருவாக்கீனீர்களாக இருந்தால் மென்மேலும் நிதிகளைப் பெற்று அபிவிருத்திகளை மேலோங்கச் செய்யலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காலநிலையும் மாற்றமடைந்;துள்ளது ஒருவருடத்தில் வெள்ளப் பெருக்கு வருகின்றது பின்னர் வெள்ளம் வரும் காலத்தில் வரட்சி வருகின்றது. எனவே விவசாயிகளும் இனிமேல் வேளாண்மை வயல்களுக்கு காப்பறுதி செய்ய வேண்டும். காப்பறுத்தி செய்தால் மாத்திரம்தான் நட்டம் ஏற்பட்டால் நட்ட ஈடு பெற்றுக் கொடுக்கலாம்.  என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: