19 Jan 2014

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண் 20 முறை கர்ப்பம் அடைந்து, கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

SHARE
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண் 20 முறை கர்ப்பம் அடைந்து, கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலும் மனம் தளராத அந்த பெண், சிகிச்சையை மேற்கொண்டு 21முறை கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Birmingham என்ற பகுதியை சேர்ந்த 37 வயது Kelly Moseley என்ற பெண்ணுக்கு கடந்த 2002 ஆம்  Alan since என்பவருடன் திருமணம் நடந்தது. அதன் பின்பு அவர் பலமுறை கர்ப்பமானா. ஆனால் எதிர்பாராத காரணத்தில் 5 முதல் 7 வாரங்கள் ஆன நிலையில் கருச்சிதைவு அவருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் 20 முறை கருச்சிதைவு ஏற்பட்டதால் அவரது கணவரும், உறவினர்களும் இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ளூம் முயற்சியை கைவிட்டுவிடும்படி அவருக்கு அறிவுரை கூறினார்.
ஆனால் Kelly Moseley மனம் தளரவில்லை. இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருச்சிதைவை தடுப்பது குறித்து நிபுணர் ஒருவர் பேசிய நிகழ்ச்சியை பார்த்த அவர் அந்த நிபுணரை நேரில் சந்தித்து தனக்குரிய பிரச்சனை குறித்து ஆலோசித்தார். அந்த மருத்துவர் Hassan Shehata கூறிய சில சிகிச்சை முறையை மேற்கொண்ட பின்னர் 21 வது முறையாக கர்ப்பம் அடைந்து ஒரு அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்து சாதனை புரிந்துள்ளார்.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியபோது, அந்த பெண்ணுக்கு ரத்த வெள்ளை அணுக்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரிசெய்ததால்தான் குழந்தை நலமாக பிறந்ததாக கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: