25 Jan 2014

மட் மாநகர சபைக்கு சகல வரிகளுமாக 117 மில்லியன் ரூபா வரவேண்டியுள்ளது

SHARE
 (வரதன்)  



மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள எம்.உதயகுமார்

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஆணையாளர்இ 

மட் பாடசாலை மாணவர்கள் மெய்வல்லுனர் போட்டிகளை நடாத்துவதற்கும்இ விளையாட்டு பயிற்சிகளை மாநகர சபையின் பின்னாலுள்ள காணியினை கிறவலிட்டு அதை புனரமைத்து மாணவர்களுக்கு தற்காலிகமாக விளையாட்டுபயிற்சிகளை மேற்கொள்ள வழிசெய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம்' 

'மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள பாதையோரங்களில் வியாபாரம் செய்யும் வீதியோர வியாபாரிகளை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான மாற்று ஒழுங்குகளும் செய்து கொடுக்க ஆலோசித்து வருகின்றோம். மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் காணப்படும் கட்டாக்காலி மாடுகளை தெருக்கலில் மேய விடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
 ஒரு மாட்டுக்கு 5000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டு வருகின்றது. தெருக்கலில் மாடுகள் மேய்வதால் வீதிவிபத்துக்கள் அடிக்கடி இடம் பெறுகின்றன. மட் மாநகர சபைக்கு சகல வரிகளுமாக 117 மில்லியன் ரூபா வரவேண்டியுள்ளது. இந்த நிலுவையில் கடந்த ஆண்டு மாத்திரம் 29.6 மில்லியன் ரூபா வரி வரவேண்டியுள்ளது. இதில் சோலை வரிஇ மற்றும் குத்தகைஇ வருமான வரிகளாகும்.

இந்த நிலுவையாக உள்ள வரியினை இந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்துபவர்களுக்கு 10 வீத கழிவும்இடிசம்பவர் வரை செலுத்துபவர்களுக்கு 5 வீத கழிவும்இ சலுகையாக வழங்கப்படுவதுடன் அடுத்த ஆண்டுக்குள் செலுத்தி முடிக்க தவறுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' என்று அவர் கூறினார்.




SHARE

Author: verified_user

0 Comments: