வேள்ட் வி~ன் நிறுவனம் தனது கிரான் பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின்கீழ் (வேட்விஷன் கிரான் ஏடீபி ) கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பல கிராமங்களில் பல்வேறு வேலைத்திட்டங்களை (கல்வி, சுகாதாரம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சிறுவர் திட்டங்கள்) மேற்கொண்டுவருகிறது. அதனடிப்படையில் பாலயடித்தோனா கடலூர் கிராமங்களை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட போர் மற்றும் சுணாமியால் பாதிக்கப்பட்ட 24 வறிய கடற்தொழில் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் வைபவம் கிரான் பிராந்திய வேள்ட் வி~ன் நிறுவன முகாமையாளர் எஸ்.பி பிரேமசந்திரன் தலைமையில் கிரான் கடலூர் பாலர் பாடசாலை கட்டடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது, வேள்ட் வி~ன் நிறுவன முகாமையாளர் வரவேற்கப்பட்டு மீன்பிடி உபகரணங்கள் கையளிக்கப்படுவதையும் வேள்ட் வி~ன் நிறுவன பொருளாதார திட்ட இணைப்பாளர் ஜே.ஆர் அகிலானந்தன் உத்தியோகத்தர் மற்றும் பங்காளர் நிறுவன உத்தியோகத்தர்கள், கிராமிய மீன்பிடி அமைப்பு உத்தியோக்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment