23 Sept 2012

மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாச பிரதமராக பதவிவகித்த காலத்தில் பஞ்சலிங்கம், பாஸ்கரலிங்கம், சண்முகலிங்கம் என ஐந்து லிங்கங்களாகிய தமிழர்களையே செயலாளர்களாக நியமித்திருந்தார்

SHARE


பிரணி

இலங்கையில் மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாச பிரதமராக பதவிவகித்த காலத்தில் பஞ்சலிங்கம், பாஸ்கரலிங்கம், சண்முகலிங்கம் என ஐந்து லிங்கங்களாகிய தமிழர்களையே செயலாளர்களாக நியமித்திருந்தார் இது தமிழர்களுடைய  கல்விக்கு கிடைத்த பெருமை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

25 வருடங்களுக்கு முன்னர் ஏனைய இனங்களுடன் ஒப்பிடும்போது கல்வியில் முன்னிலை வகித்த தமிழர்கள் தற்போது பின்தள்ளப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு பாடசாலைக் கல்வி அடித்தளமாக இருப்பதால் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்; என அவர் கூறினார்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையூடாக செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்  செங்கலடி மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இன்று மாலை 23.09.2012) கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் அவர் மேலும் கருத்து தெரிவிக்குகையில்


கல்லூரி அதிபர் க.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று-2 கோட்டக்கல்வி அதிகாரி அ.சுகுமாரன் மற்றும் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அவர் மேலும் கருத்து தெரிவிக்குகையில்

எமது நாட்டை அந்நியர் ஆட்சிக் செய்த போது கல்வியில் தடம் பதித்தது மட்டக்களப்பு மாவட்டம். அக்காலத்தில் பண்டிதராக, முத்தமிழ் வித்தரகராகவும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதல் தமிழ் பேராசிரியர் பட்டம் பெற்று  சுவாமி விபுலானந்தர் மட்டக்களப்பு மண்ணுக்கே பெருமைசேர்த்தார். அவ்வாறு நாங்கள் கல்வியிலே உயர்நது விளங்கினோம். எமது சமூகத்திடம் கல்வி கற்றவர்கள் இன்று உயர்ந்திருக்கிறார்கள் என்றால் நாங்கள் எமது கல்வியை முன்னேற்றாமைக்கு எமது கவலையினமும் நாட்டுச் சூழலும் ஒரு காரணமாக அமைந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மாணவர்களுடைய விகிதத்திற்கும் ஏனைய சகோதர மாணவர்களின் விகிதத்திற்கும் பாரிய இடைபெளி உள்ளது. ஆனால் அவர்கள் உயர்கல்வி பயில்கின்ற விகிதமும் நாங்கள் உயர்கல்வி பயில்கின்ற விகிதமும் மிகவும் ஏற்றத்தாழ்வாக உள்ளதென்பது நாம் வேதனைப்பட வேண்டிய விடயமாகும்.

சுமார் 75 வதவீதமாக இருக்கின்ற எமது மாணவர் தொகை பல்வேறு உதாசீனங்கள் காரணமாகவும் எமது அக்கறையின்மை காரணமாகவும் எமக்கு வரவேண்டிய உயர்கல்வி வாய்ப்புக்களையெல்லாம் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கின்ற ஒரு சந்தர்ப்பம் நாம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

இந்தநிலையை நாங்கள் மாற்ற வேண்டும் என்பதற்காக கல்விக்காக பல சேவைகளை இந்து இளைஞர் பேரவையூடாக வழங்கி வருகிறோம். எமது பிரதேச மாணவர்கள் கிடைத்திருக்கின்ற சந்தர்பங்களைப் பயன்படுத்தி கல்வி ரீதியாக தம்மை முன்றிக்கொள்ள வேண்டும்.

இந்த பாடசாலை கல்வி பயின்று அதை ஒரு களமாகப் பயன்படுத்தி உங்கள் பொருளாதாரத்தையும் உங்களது வாழ்க்கையையும் வளம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகளை இப்போது ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.

உயர்கல்விக்காக தெரிவு செய்யப்படும் மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால்  நாங்கள் உதவத் தயாராக இருக்கின்றோம். இப்போது 79 பல்கலைக் கழக மாணவர்களுக்கு மாதாந்தம் நிதியுதவி வழங்கி வருகின்றோம்.

எமது எதிர் பார்ப்புகள் எல்லாம் எமது சமூகம் கல்வியில் முன்னேற்றமடைய வேண்டும். அவ்வாறு முன்னேற்றமடையும் சமூகம் எங்கள் மக்கள் மத்தியிலிருந்து சேவையாற்ற வேண்டும்.

எமது மாவட்டங்களிலுள்ள பல வைத்தியசாலைகளில்  வைத்தியர் பற்றாக்குறை நிலவுகிறது காரணம் எமது பிரதேசத்தில் வைத்தியராக தெரிவு செய்யப்பட்டு கடமை புரிந்தவர்கள் இன்று வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்கள் பலர் கொழும்பில் தொழில்புரிய சென்றுவிட்டார்கள் எமது பிரதேசங்களில் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் கடமையாற்ற வேண்டியுள்ளது. வருங்காலங்களிலாவது சொந்த இடங்களில் கடமையாற்றுவதற்கு முன்வரவேண்டும். எமது சமூகத்தினுடன் ஒன்றுபட்டு நாங்கள் செயற்பட வேண்டும்” என்றார் 











SHARE

Author: verified_user

0 Comments: