கோட்டைக்கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் அனுசரணையுடன் “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய மண்டபத்தில் இரத்ததான நிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிக்கு இங்கு பெறப்பட்ட இரத்தம் வழங்கப்பட்டன. கோட்டைக் கல்லாறு சமூக உயர்கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவர் சி.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
சங்கத்தின் உறுப்பினர்கள், சங்கத்தின் போசகர்கள், சமூக நலன் விரும்பிகள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment