30 Sept 2012

இந்து இளைஞர் பேரவையின்; வெருகலம்பதி யாத்திரை

SHARE

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வருடாந்தம் நடாத்தி வரும் திருகோணமலை மாவட்ட வெருகலம்பதி சித்திவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு இம்முறை கடந்த வியாழக்கிழமை (27.09.2012) மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்ற பின்னர் அங்கிருந்து யாத்திரை ஆரம்பமானது.
பின்னர் பிரதான வீதி வழியாக உள்ள அனைத்து ஆலயங்களையும் தரிசித்து சென்று எதிர்வரும் திங்கட்கிழமை (01.10.2012) வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையவுள்ளது.
இன்று மூன்றாவது நாளாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து இன்நடை பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்யாத்திரை ஒழுங்கினை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவான மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரன், ஞா.கிருஸ்ணபிள்ளை, இ.நித்தியானந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொருளாளர் நா.புவனசுந்தரம், இணைச்செயலாளர் எஸ்.விமலானந்தராசா கிழக்கு இந்து ஒன்றிய பொதுச் செயலாளர் கதிர் பாரதிதாசன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர பேரவையின் உறுப்பினர்களான கி.ரவீந்திரராசா, சொ.ரதன், ச.ஜெயலவன், சே.நிமல்ராஜ், ந.குகதர்சன், இ.தேவகுமார் உட்பட பல பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். 





SHARE

Author: verified_user

0 Comments: