30 Sept 2012

தமிழ் தேசிய கூட்டமைப்பு கிடைக்கும் வாக்குகளைச் சிதறடிப்பதற்காக அரசாங்கத்தின் முகவர்களாக சில சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டனர்.

SHARE

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரமுடியவில்லை என்றால் அதற்கான பொறுப்பை  பேரினவாதக் கட்சிகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களே ஏற்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று காலை செங்கலடி பிரரேதசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்; கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா), ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர் 
“கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளின் படி தமிழ் மக்கள் கனிசமானோர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே ஆதரவு வழங்கினார்கள் இதன் காரணமாக 11 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளது.
அச்சுறுத்தல்கள் மற்றும் ஜனநாயக விரோத போக்குகளுக்கு மத்தியிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலைச் சந்தித்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கிடைக்கும் வாக்குகளைச் சிதறடிப்பதற்காக அரசாங்கத்தின் முகவர்களாக சில சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டனர். என்றாலும் தமிழ் மக்கள் தங்களால் முடிந்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தே கூடுதலான பிரதிநிதிகளைத் தெரிவு செய்தார்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்ட தமிழர்கள் தமிழ் மக்களின் வாக்குகள் சுமார் 25-30 ஆயிரம் வரை தாரைவார்த்துக் கொடுத்துள்ளார்கள். இதன் காரணமாகவே மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தலா ஒரு ஆசனமும் போனஸ் இரண்டு என ஐந்து ஆசனங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்குப் பொறுப்பானவர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்துகிறார்கள். கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும் தமிழன் ஒருவன் முதலமைச்சராக வர கூடாது என்பதில் அரசாங்கம் குறியாக இருந்தது. அதை அவர்கள் செய்தும் காட்டியுள்ளார்கள் தமிழர் முதலமைச்சராக
வரமுடியாமல் போனமைக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கத்திற்கு வாக்கு சேர்த்துக் கொடுத்த தமிழ் தலைமைகளே ஏற்க வேண்டும்.
தமிழ் மக்களை பொறுத்தவரை கிழக்கு மாகாண சபைத் தேர்;தலில் பலம் வாய்ந்த ஆணையை தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழங்கியுள்ளார்கள் எமது மக்களுடைய உரிமையை பெறும் வரைக்கும் எமது போராட்டங்களும் தொடரும்” என்றார்.
.

SHARE

Author: verified_user

0 Comments: