21 Sept 2012

யுஎஸ் எயிட் நிறுவனத்தின் நிதியுதவியுடன்; பாம் பவண்டேசன் நிறுவனத்தினூடாக மட்டக்களப்பில் அபிவிருத்தித்திட்டம்

SHARE

யுஎஸ் எயிட் நிறுவனத்தின் நிதியுதவியுடன்; பாம் பவண்டேசன் நிறுவனத்தினூடாக மட்டக்களப்பில் அபிவிருத்தித்திட்டம் பாம் பவண்டேசன் நிறுவனத்தினூடாக யுஎஸ் எயிட் (ருளுயுஐனு) நிறுவனத்தின் நிதியுதவியுடன்; மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் செயற்றிட்டங்கள் பற்றி விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று இன்று (21.09.2012)  மட்டக்களப்பு கச்சேரியில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில். தெரிவு செய்யப்பட்ட செங்கலடி, களுவாஞ்சிகுடி, ஆரயம்பதி, பட்டிப்பளை. ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிக் கீழுள்ள ஆறு கிராம சேலையாளர் பிரிவுகளில் நீர் வழங்கல் மலசலகூட சுகாதாரத்திட்டம் ரூபா.499257.00 அமெரிக்க டொலர் செலவில் இத்திட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாக இந்நிகழ்வில் கலந்த கொண்ட யுஎஸ் எயிட் நிறுவனத்தித்தின் பிரதிநிதி அடம் சுமித் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எம்.சாள்ஸ்,மாவட் திட்டமிடல் பணிப்பாளர் நெடுஞ்செழியன்,மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், யுஎஸ் எயிட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பாம் பவண்டேசன் நிறுவனத்தின் பிரதிநதிகள், பிரதேச செயலாளர்கள், கிராமசேவை உத்தியோகஸ்தர்கள். பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இத்திட்டம் எதிர்வரும் 30.செப்ரம்பர் 2013 இல் நிறைவடையவள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.








SHARE

Author: verified_user

0 Comments: