மட்டக்களப்பு நரின் பூம்புகார் எனும் இடத்தில் முன்னர் மாடு அறுக்கும் இடம் அமைந்திருந்த ஆற்றுப்பகுதியில் கடந்த திங்கட் கிழமை (17.09.2012) காலை மூன்று கைக்குண்டுகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த ஆற்றுப்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் வழங்கிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிசார் இக்கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.
பின்னர் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேக்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment